Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SA 20 ஏலம் சீசன் 4: சிங்கத்தை கூப்பிட்டு வந்து அசிங்கப்படுத்திட்டானுங்க.. விலை போகாத ஆண்டர்சன்.. முழு பட்டியல்

டர்பன்: தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற எஸ் ஏ 20 தொடருக்கான ஏலம் விறுவிறுப்பாக நடந்து முடிந்திருக்கின்றது. இதில் பல வீரர்கள் புதிய சாதனையை படைத்திருக்கிறார்கள். குறிப்பாக ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய பிரவீசை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவியது.

இதனால் இந்திய ரூபாய் மதிப்பில் அவர் 8 கோடி ரூபாய்க்கு ஏலம் செல்லப்பட்டார். இந்த தருணத்தில் பல முன்னாள் வீரர்கள் எஸ்ஏ 20 தொடரில் விளையாடுவதற்காக தங்களது பெயரை ஏலத்தில் பதிவு செய்திருந்தனர்.

SA 20 auction Anderson

இதில் 43 வயதான இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் ஆண்டர்சன் தனது பெயரை இந்திய ரூபாய் மதிப்பில் 50 லட்சத்திற்கு அடிப்படை விலையாக நிர்ணயித்திருந்தார். இதனால் ஆண்டர்சன் எஸ் ஏ டி 20 தொடரில் தேர்வு செய்யப்படுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆண்டர்சனை எந்த அணியும் வாங்க முன் வரவில்லை.

ஏற்கனவே ஐபிஎல் தொடரில் இதேபோன்று ஒரு நிலை ஆண்டர்சனுக்கு ஏற்பட்ட நிலையில் தற்போது எஸ்ஏ 20 தொடரிலும் அவர் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார். ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

இதனால் ஆண்டர்சனுக்கா இந்த நிலை என்று ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இதேபோன்று இங்கிலாந்து வீரர் மோயின் அலி, ஜேசன் ராய், இலங்கை அணியின் குசல் பெரேரா, பினூரா பெர்னாண்டோ உள்ளிட்ட வீரர்களும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை. இந்த ஏலத்தில் எடுக்கப்படாத வீரர்கள் யார் யார் என்று பட்டியலை தற்போது பார்க்கலாம்.

ஜோர்டான் காக்ஸ், முஸ்தபிசூர் ரஹ்மான், டாம் அபெல், குசல் பெரேரா, ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, லியூஸ் டு பிளூய், ஜார்ஜ் கார்டன், ஜெய்டன் சீல்ஸ், ஜூனியர் டாலா, ரஹ்மானுல்லா குர்பாஸ், டாம் கோலர்-கேட்மோர், சைமன் ஹார்மர், கைல் சிம்மண்ட்ஸ், வகார் சலாம்கெயில், பிராண்டன் மெக்முல்லன், கீசி கார்ட்டி, டெம்பா பவுமா, தவாண்டா முயேயே, கீத் டட்ஜன், ஒகுலே செலே, மேத்யூ போஸ்ட், மிகேல் ப்ரிடோரியஸ், ந்கோபானி மோகோனா.

ஜேம்ஸ் ஆண்டர்சன், சோனி பேக்கர், டேனியல் ஸ்மித், ஆன்ட்ரீஸ் கவுஸ், கிராண்ட் ரோலோஃப்சன், ஜூவல் ஆண்ட்ரூ, ஸ்கால்க் எங்கல்பிரெக்ட், தாமஸ் கேபர், நாதன் சவுட்டர், காலெப் சலேகா, மொயீன் அலி, ஜோர்டான் கிளார்க், ஜேசன் ராய், ஜோர்டான் தாம்சன், ஜாக்குவஸ் ஸ்னைமன், பியூரன் ஹென்ட்ரிக்ஸ், ருவான் ஹாஸ்ப்ரோக், வெய்ன் பார்னல், ஜேம்ஸ் ராப்-குயின்லன், ஆபிவே ம்ந்யாண்டி, ஜோரிச் வான் ஷால்க்விக், ஜார்ஜ் வான் ஹீர்டன், ஜான்-ஜான் ஸ்மட்ஸ், நங்கேயாலியா கான், ஜீன் டு பிளெசிஸ், டுவான் ஜான்சன், பினுரா பெர்னாண்டோ.

Story first published: Wednesday, September 10, 2025, 6:58 [IST]
Other articles published on Sep 10, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+