Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வயிறு வலி போச்... இன்னைக்கு ரெஸ்ட்... தெ. ஆப்பிரிக்கா ஏ - ஆஸி. போட்டி நாளைக்கு ஒத்திவைப்பு

சென்னை: தென் ஆப்பிரிக்க வீரர்கள் உடல் உபாதையிலிருந்து விடுபட்டுள்ளனர். இருப்பினும் ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதால், இன்று நடைபெறவிருந்த தென் ஆப்பிரிக்கா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ இடையிலான முத்தரப்புப் போட்டி நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 13ம் தேதி இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ ஆகிய அணிகள் மோதவுள்ளன. இதையடுத்து ஆகஸ்ட் 14ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும்.

முதல் இரு இடங்களைப் பெறும் அணி இறுதிப் போட்டியில் மோதும். தற்போதைய நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் வாய்ப்பில் உள்ளன.

ஒரு நாள் ஓய்வு

ஒரு நாள் ஓய்வு

தற்போது தென் ஆப்பிரிக்க வீரர்கள் அனைவருமே மருத்துவமனையிலிருந்து ஹோட்டல் திரும்பி விட்டனர். ஒரு நாள் ஓய்வெடுக்க அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எனவேதான் இன்றைய போட்டி நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

10 வீரர்களுக்குப் பாதிப்பு

10 வீரர்களுக்குப் பாதிப்பு

சென்னையில் முகாமிட்டு முத்தரப்புத் தொடரில் பங்கேற்றுள்ள தென் ஆப்பிரிக்க ஏ அணி வீரர்கள் பத்து பேருக்கு திடீரென வயிற்று உபாதை ஏற்பட்டது. வயிற்றுப் போக்கு மற்றும் புட் பாய்சன் காரணமாக அவர்கள் அவதிப்பட்டனர்.

2வது முறையாக ஒத்திவைப்பு

2வது முறையாக ஒத்திவைப்பு

இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டி ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டது. அதற்குப் பதில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் நேற்று மோதின. இதில் இந்தியா தோல்வியடைந்தது.

இன்றும் ஒத்திவைப்பு

இன்றும் ஒத்திவைப்பு

இந்த நிலையில் இன்றைய போட்டியும் ஒத்திவைக்கப்பட்டு நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தென் ஆப்பிரிக்கா தான் மோதிய இரு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. நாளைய போட்டிதான் அதற்கு கடைசி லீக் போட்டியாகும்.

வரலாறு காணாத சம்பவங்கள்

வரலாறு காணாத சம்பவங்கள்

தென் ஆப்பிரிக்காவின் 10 வீரர்கள் சுகவீனமடைந்ததால் அந்த அணி வரலாறு காணாத சம்பவங்களைச் சந்திக்க நேர்ந்தது. இந்திய வீரர் மந்தீப் சிங் அந்த அணிக்காக பீல்டிங் செய்ய வைக்கப்பட்டார். அதேபோல தென் ஆப்பிரிக்க அணியின் வீடியோ அனாலிஸ்ட்டும் ஒரு பீல்டராக களம் இறங்கிய சுவாரஸ்யமும் நடந்தது.

Story first published: Tuesday, August 11, 2015, 12:38 [IST]
Other articles published on Aug 11, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+