Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி படையை மிரட்டும் டுவெயின் ஆலிவியர்..!! யார் இவர்? அவர் செய்த சாதனை என்ன?

செஞ்சூரியன்: இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 3போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது

தென்னாப்பிரிக்க மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றதே இல்லை.இதனால், இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஸ்டெயின், மார்கெல், பிளாண்டர் போன்ற தலைச் சிறந்த பந்துவீச்சாளர்கள் இப்போது இல்லை. ஆனால் அவர்களை போல் மிரட்டும் பந்துவீச்சாளர் ஒருவர் தென்னாப்பிரிக்க அணியில் இருக்கிறார்

கவுண்டி கிரிக்கெட்

கவுண்டி கிரிக்கெட்

திறமையான வீரர்களை கொக்கி போட்டு இழுக்கும் வேலையை இங்கிலாந்து காலம் காலமாக செய்து வருகிறது. அப்படி இங்கிலாந்து ஒருவரை குறி வைத்தால் அவர் எவ்வளவு திறமையான வீரராக இருப்பார். அவர் தான் டுவெயின் ஆலிவியர். தென்னாப்பிரிக்க அணிக்காக மிரட்டிய அவர், வசதி வாய்ப்புக்காக இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட சென்றுவிட்டார்.

48 விக்கெட்டுகள்

48 விக்கெட்டுகள்

கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரை தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாடினார் டுவெயின் ஆலிவியர். இந்த காலக்கட்டத்தில் 10 டெஸ்ட்களில் விளையாடியுள்ள ஆலிவியர் 48 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.இதில் மூன்று முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஆலிவியர்,.

ஆட்டநாயகன்

ஆட்டநாயகன்

தென்னாப்பிரிக்க வேகப்பந்து ஜாம்பவான் ஆலன் டோனால்ட் பிறந்த Bloemfontein மண்ணில் தான் ஆலிவியரும் பிறந்துள்ளார். வேகப்பந்துவீச்சுக்காகவே தயார் செய்தது போன்ற உடல் அமைப்பை கொண்டுள்ள ஆலிவியர் , 2018ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 37 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.அதே டெஸ்டில் 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்

Recommended Video

Mohammed Siraj is a fast learner, has shown maturity: Sachin Tendulkar | Oneindia Tamil
இந்தியாவுக்கு அச்சுறுத்தல்

இந்தியாவுக்கு அச்சுறுத்தல்

இதே போன்று கேப்டன் டவுன் டெஸ்ட்டில் 5 விக்கெட்டுகள், ஜோகனப்ர்கில் 8 விக்கெட்டுகள் என 3 டெஸ்ட்டில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.இதே போன்று இலங்கைக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆலிவியர். நல்ல ரிவர்ஸ் சுவிங், பவுன்ஸ், ஸ்பீடு என மூன்று கலைகளிலும் கைத்தேர்ந்துள்ள ஆலிவியர், 2 ஆண்டுகளுக்கு பிறகு தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாட உள்ளார். இவர் இந்திய அணி வீரர்களுக்கு பெரும் தலைவலியாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, December 25, 2021, 18:53 [IST]
Other articles published on Dec 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+