Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர் விளையாடலனு கண்ணீர் விட முடியாது..சீனியர் குறித்து பெவுமா காட்டம்.. வெற்றியிலும் குறை கண்ட பண்ட்

விசாகப்பட்டினம்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீசியது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் ருத்துராஜ், இஷான் கிஷன் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 179 ரன்களை குவித்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 131 ரன்களில் ஆட்டமிழந்தது.

சொதப்பி விட்டோம்

சொதப்பி விட்டோம்

தோல்வி குறித்து பேசிய தென்னாப்பிரிக்க கேப்டன் பெவுமா, ஒரு அணியாக இந்தப் போட்டி எங்களுடைய சிறந்த பங்களிப்பை நாங்கள் தரவில்லை. இந்திய பந்துவீச்சாளர்கள் எங்களுக்கு தொடர்ந்து நெருக்கடி அளித்தனர். பேட்டிங்கில் நாங்கள் சொதப்பி விட்டோம். எங்களால் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாட முடியவில்லை. இந்த ஆட்டத்தில் எங்களுடைய ஃபில்டிங்கும் சரியில்லை.

பெவுமா காட்டம்

பெவுமா காட்டம்

தொடக்கத்தில் 3 விக்கெட்டுகளை இழந்தது எங்களுக்கு பின்னடைவாக அமைந்தது. குயின்டன் டி காக் எங்கள் அணியின் முக்கியமான வீரர். அவர் இல்லை என்பதால், எங்களால் கண்ணீர் விட்டு அழ முடியாது, ஹேண்ட்ரிக்ஸ் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி இருக்கிறார். அடுத்த போட்டியில் தவறுகளை திருத்திக் கொள்வோம்.

ஆட்டநாயகன் சாஹல்

ஆட்டநாயகன் சாஹல்

இந்தப் போட்டியில் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய சாஹல், ஆட்டநாயகன் விருது வென்றார். அப்போது பேசிய அவர், கடந்த 2 போட்டியில் சரியாக பந்துவீசவில்லை. இதனால், இன்றைய ஆட்டத்தில் லெக் பிரேக்குகளை வேகமாக வீசினேன். அது நல்ல பலனை தந்தது என்று கூறினார். வெற்றி குறித்து பேசிய கேப்டன் ரிஷப் பண்ட், இந்த ஆட்டத்தில் நாங்கள் வகுத்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தினோம்.

Recommended Video

IND vs SA Rahul Dravid Planனை உடைத்த Shreyas Iyer | *Cricket
குறை கூறிய பண்ட்

குறை கூறிய பண்ட்

முதலில் 15 ரன்கள் குறைவாக அடித்துவிட்டோம் என்று எண்ணினேன். ஆனால் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். இந்தியாவில் சுழற்பந்துவீச்சு நன்றாக எடுக்கும். இதனால் அவர்களை சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற நெருக்கடி இயற்கையாகவே இருக்கும். எங்களுடைய பேட்டிங் நடுவரிசை சரியில்லை. தொடக்க வீரர்கள் போட்ட அடித்தளத்தை வீணடித்துவிட்டோம் அடுத்த போட்டியில் இதனை சரி செய்ய முயற்சிப்போம்.

Story first published: Wednesday, June 15, 2022, 13:08 [IST]
Other articles published on Jun 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+