கிங் பவுமா.. இதுதான்டா என் பெயர்.. ஒற்றை ஆளாக நின்று ஆஸ்திரேலியா பவுலர்களை அசரடித்த கேப்டன்!
குபர்ஹா: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி தடுமாறிய போது, கேப்டன் டெம்பா பவுமா சதம் விளாசி அசத்தியுள்ளார். 92 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை தடுமாறிய போது, டெம்பா பவுமா - மார்கோ யான்சன் கூட்டணி தென்னாப்பிரிக்கா அணியை மீட்டெடுத்துள்ளது.
தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் 2 நாட்கள் ஆட்டம் மழை காரணமாக முழுமையாக நடக்கவில்லை. இந்த நிலையில் 3வது நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி மிகப்பெரிய சோதனையை சந்திக்கும் என்று பார்க்கப்பட்டது. ஏனென்றால் போலண்ட் பவுலிங்கில் தென்னாப்பிரிக்கா டாப் ஆர்டர் தடுமாறி விக்கெட்டை பறிகொடுத்தது.

அக்கர்மேன் 6 ரன்களிலும், பெடிங்ஹம் டக் அவுட்டாகியும், மார்க்ரம் 11 ரன்களிலும், ப்ரீட்ஸ்கே 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் தென்னாப்பிரிக்கா அணியை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு கேப்டன் பவுமா தலையில் விழுந்தது. தொடர்ந்து வந்த ரிக்கல்டன் 31 ரன்களிலும், முல்டர் 11 ரன்களிலும் ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்கா அணி 110 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் தென்னாப்பிரிக்கா அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் திடீரென களம் புகுந்த மார்கோ யான்சன் அதிரடியாக சிக்ஸ், பவுண்டரி என்று விளாசி தள்ளினார். ஒரு பக்கம் பவுமா நிதானமாக ரன்களை சேர்க்க, யான்சன் 100 பந்துகளில் 3 சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 85 ரன்களை விளாசி தள்ளினார்.
இதனால் தென்னாப்பிரிக்கா அணி தடுமாற்றத்தில் இருந்து எஸ்கேப்பானது. இருப்பினும் தென்னாப்பிரிக்கா அணியின் கைகள் கேப்டன் பவுமாவின் ஆட்டத்தால் ஓங்கி இருக்கிறது. அபாரமாக ஆடிய கேப்டன் டெம்பா பவுமா 226 பந்துகளில் சதம் விளாசி தரமான கம்பேக்கை கொடுத்தார். இவரின் ஆட்டத்தால் தென்னாப்பிரிக்கா அணியின் ஸ்கோர் 300 ரன்களை கடந்திருக்கிறது.
லோயர் ஆர்டர் வீரர்களுடன் பவுமா பேட்டிங் செய்வது தென்னாப்பிரிக்கா ரசிகர்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் விருந்தாக அமைந்துள்ளது. புதிய பந்து, பழைய பந்து என்று இரண்டையும் சமாளித்து ஒரு கேப்டனாக பவுமா அணியை காப்பாற்றி இருக்கிறார். இதனால் இது பவுமாவின் எரா என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
