Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெவுமா ரன் அவுட்டில் சர்ச்சை..!! இந்திய வீரர்களை சீண்டும் தென்னாப்பிரிக்கா..!!

கேப் டவுன்: இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி கேப் டவுனில் நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஓயிட் வாஷை தவிர்க்கும் விதமாக இந்திய அணி வீரர்கள் ஆறுதல் வெற்றிக்காக விளையாடி வருகின்றனர்

இந்திய அணியில் தீபக் சாஹர், பிரஷித் கிருஷ்ணா, ஜெயந்த் யாதவ், சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தீபக் சாஹர்

தீபக் சாஹர்

தொடரின் முதல் போட்டியில் களமிறங்கிய தீபக் சாஹர் , துல்லியமாக பந்துவீசி தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு நெருக்கடியை தந்தார்.ஆட்டத்தின் 2வது ஓவரில் தீபக் சாஹர் வீசிய பந்தை மாலன் தொட, ரிஷப் பண்ட்டிடம் பிடிப்பட்டு 1 ரன்னில் ஆட்டமிழந்தார்,

ரன் அவுட்

ரன் அவுட்

இதனையடுத்து கேப்டன் பெவுமா பேட்டிங் செய்ய வந்தார். ஆட்டத்தின் 6.3வது ஓவரில் தீபக் சாஹர் வீசிய பந்தை பெவுமா அடித்து ரன் ஓட முயன்றார். அப்போது திபக் சாஹர் அவரது இடத்தில் தான் நின்றார். ஆனால், அவர் மீது மோதி விடக் கூடாது என்பதற்காக பெவுமா கொஞ்சம் நகர்ந்து கோணலாக ஓடினார். இதனால் அவர் ரன் அவுட் ஆனார்

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

இதனால் அதிர்ச்சி அடைந்த பெவுமா களத்தில் அப்படியே நின்று இந்திய வீரர்கள் மீது தான் தவறு என்பதை போல் பார்த்தார். இதே போன்று தென்னாப்பிரிக்க வர்ணனையாளர்களும் தீபக் சாஹர் குறுக்கே நின்றதால் தான் பெவுமா ஆட்டமிழந்ததாக நேரலையில் குற்றஞ்சாட்டினார்.

யார் மீது தவறு

யார் மீது தவறு

பெவுமா ஓடி வருவதை பார்த்து , அவர் வழியில் வந்து நின்றால் தீபக் சாஹர் மீது தவறு என்று சொல்லாம். இல்லை வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மான் மாதிரி வேண்டும் என்றே பேட்ஸ்மேன் குறுக்கே வந்து நின்றால் அதை தவறு என்று சொல்லலாம். ஆனால் தீபக் சாஹர் தனது ரன் அப்பை முடித்த இடத்தில் பந்தை தான் கவனித்தார். இதனால் பெவுமா மீது தான் தவறு.

Story first published: Sunday, January 23, 2022, 19:18 [IST]
Other articles published on Jan 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+