Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பைனலில் மரண அடி அடித்த ஏபி டிவில்லியர்ஸ்.. பாகிஸ்தானை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா கோப்பை வென்றது

பர்மிங்காம்: 2025 வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் தொடரின் இறுதிப் போட்டியில், ஏபி டி வில்லியர்ஸ்-இன் காட்டடி சதத்தால் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணியில், தொடக்க ஆட்டக்காரர் ஷர்ஜீல் கான் 44 பந்துகளில் 76 ரன்கள் விளாசினார்.

AB de Villiers Pakistan Champions South Africa Champions WCL

பாகிஸ்தான் இன்னிங்ஸ்

பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷர்ஜீல் கான் மற்றும் கம்ரான் அக்மல் ஆகியோர் களமிறங்கினர். கம்ரான் அக்மல் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஷர்ஜீல் கான் அதிரடியாக ஆடினார். அவர் 44 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 76 ரன்கள் குவித்தார்.

கேப்டன் ஹபீஸ் 17 ரன்களிலும், ஷோயப் மாலிக் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதிக் கட்டத்தில் உமர் அமின் 19 பந்துகளில் 36 ரன்களும், ஆசிப் அலி 15 பந்துகளில் 28 ரன்களும் விளாச, பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா தரப்பில் ஹார்டஸ் வில்ஜோன் மற்றும் வெய்ன் பார்னெல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தென்னாப்பிரிக்காவின் பதிலடி

196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணிக்கு, தொடக்கத்திலேயே ஹசிம் ஆம்லா 18 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். ஆனால், அதன் பிறகு மற்றொரு துவக்க வீரரான 'மிஸ்டர் 360' ஏபி டி வில்லியர்ஸ், பாகிஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.

அவருக்குத் துணையாக நின்ற ஜீன்-பால் டுமினி நிதானமாக ஆட, டி வில்லியர்ஸ் வானவேடிக்கை காட்டினார். அவர் வெறும் 60 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 120 ரன்கள் குவித்தார். இதன்மூலம், இந்தத் தொடரில் தனது மூன்றாவது சதத்தைப் பதிவு செய்தார் டி வில்லியர்ஸ்.

டுமினி 28 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த ஜோடியின் அபார ஆட்டத்தால், தென்னாப்பிரிக்கா அணி 16.5 ஓவர்களிலேயே ஒரு விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்து, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது. டி வில்லியர்ஸின் இந்த அதிரடி ஆட்டம், பாகிஸ்தான் அணியிடமிருந்து வெற்றியைத் தட்டிப் பறித்தது.

Story first published: Sunday, August 3, 2025, 8:43 [IST]
Other articles published on Aug 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+