Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படி ஒரு வீரரை எங்க வச்சி இருந்தீங்க.. டி20 கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன்.. பெர்னல் பாராட்டு

கவுகாத்தி : சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன் என்ற பெயரை இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூரியகுமார் யாதவ பெற்று வருகிறார்.

தற்போது ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தில் சூரியகுமார் நீடிக்கிறார்.

சூரியகுமார் யாதவ் அறிமுகமான காலத்தில் இருந்து இன்று வரை அனைத்து வீரர்களும் அடித்த டி20 ரன்கள் கணக்கில் எடுத்துக் கொண்டால் சூரியகுமார் யாதவ் தான் முதலிடத்தில் இருக்கிறார்.

சூர்யகுமார் சாதனை

சூர்யகுமார் சாதனை

மேலும் ஒரு ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையும் சூரிய குமார் யாதவே படைத்திருக்கிறார். 21 இன்னிங்ஸில் களம் இறங்கியுள்ள அவர் 732 ரன்கள் அடித்துள்ளார். இதில் ஒரு சதமும் அடங்கும். இதற்கு முன்னாள் ஷிகர் தவான் 17 இன்னிங்ஸின் 689 ரன்கள் அடித்தது சாதனையாக இருந்தது.

அரைசதம்

அரைசதம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆடுகளம் பேட்டிங்க்கு படும் மோசமாக இருந்தது. ஆனால் சூரிய குமார் யாதவும் 33 பந்துகளில் அரைசதம் அடித்து அனைவரையும் ஆச்சரிய படுத்தினார். இதனால் இந்த வீரரை இவ்வளவு நாள் எங்க வைத்திருந்தீர்கள் என்று பலரும் கேள்வி கேட்க தொடங்கி விட்டனர். இந்த நிலையில் செய்தியாளரிடம் பேசிய தென்னாப்பிரிக்காவில் நான் கடந்த இரண்டு மாதங்களாக சூரியகுமார் ஆட்டத்தை பார்த்து வருகிறேன்.

பந்துவீசுவது கடினம்

பந்துவீசுவது கடினம்

தற்சமயம் அவர்தான் சிறந்த பேட்ஸ்மனாக விளங்குகிறார். இது என்னுடைய சொந்த கருத்து. சூரியகுமார் யாதவும் 360 டிகிரியிலும் ரன்களை அடிக்கிறார். இப்படி இருக்கும் பேட்ஸ்மனங்களுக்கு பந்து வீசுவது மிகவும் கடினம். இது வெறும் பேட்ஸ்மேனின் பலத்தை மட்டும் பொருத்தது அல்ல. அவர் ஒவ்வொரு பந்தையும் எப்படி எதிர்கொள்கிறார் என்பதை பொறுத்தது. திருவனந்தபுரத்தில் அவர் ஆடிய ஷாட்கள் எல்லாம் அற்புதமாக இருந்தது.

அச்சப்படவில்லை

அச்சப்படவில்லை

சூர்யகுமார் விளையாடுவது பார்க்கும்போது ஒரு கிரிக்கெட் ரசிகராக கொஞ்சம் மகிழ்ச்சி அடைந்தேன். அவர் நல்ல கிரிக்கெட் விளையாடி வருகிறார். முதல் டி20 போட்டி எங்களுடைய திட்டப்படி எதுவும் நடக்கவில்லை. அது எங்களுக்கு புது மைதானம் ஆகும். நாங்கள் என்ன தவறாக நடந்தது என்பது குறித்து நினைத்துக் கொண்டு இல்லை. எங்களுடைய பேட்ஸ்மெண்ட்கள் உலகத்தரம் வாய்ந்தவர்கள். எனவே நாங்கள் அச்சப்படவில்லை.

Story first published: Saturday, October 1, 2022, 20:33 [IST]
Other articles published on Oct 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+