Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாங்கய்யா வாங்க, வந்து எங்க வேகத்தைப் பாருங்க.. இந்திய வீரர்களுக்கு டிவி்ல்லியர்ஸ் 'மிரட்டல்'!

ஜோஹன்னஸ்பர்க்: இந்திய வீரர்களை எங்களது வேகப் பந்துவீச்சாளர்கள் மிகக் கடுமையாக எதிர்கொள்ளப் போவதாகவும், இந்திய வீரர்கள் எங்களது வேகப் பந்து வீச்சாளர்களிடம் சிக்கி சின்னாபின்ன்மாவது உறுதி என்றும் தென் ஆப்பிரிக்க கேப்டன் ஏப் டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் தொடர் தென் ஆப்பிரிக்காவில் டிசம்பர் 5ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில்தான் தனது அணியின் வேகப் பந்து வீச்சாளர்கள், இந்திய வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வார்கள் என்று எச்சரித்துள்ளார் டிவில்லியர்ஸ்.

ஜோஹன்னஸ்பர்க்கில் டோணி அன் கோ

ஜோஹன்னஸ்பர்க்கில் டோணி அன் கோ

கேப்டன் டோணி தலைமையிலான இந்திய அணி வீரர்கள் தற்போது ஜோஹன்னஸ்பர்க் வந்து சேர்ந்துள்ளனர்.

டிசம்பர் 6ல் முதல் போட்டி

டிசம்பர் 6ல் முதல் போட்டி

டிசம்பர் 6ம் தேதி முதல் ஒரு நாள் போட்டி ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெறுகிறது.

மொத்தம் 3 ஒரு நாள் போட்டிகள்

மொத்தம் 3 ஒரு நாள் போட்டிகள்

இரு அணிகளும் மொத்தம் 3 ஒரு நாள் போட்டிகளில் மோதவுள்ளன. 2 டெஸ்ட் போட்டிகளிலும் இவர்கள் சந்திக்கவுள்ளனர்.

தொடக்க வீரர்களுக்கு டிவில்லியர்ஸ் எச்சரிக்கை

தொடக்க வீரர்களுக்கு டிவில்லியர்ஸ் எச்சரிக்கை

போட்டி குறித்து டிவில்லியர்ஸ் கூறுகையில், இந்திய தொடக்க வரிசை ஆட்டக்காரர்களை விரைவாக ஆட்டமிழக்கச் செய்வதே எங்களது முதல் நோக்கம். இதற்கு எங்களது வேகப் பந்து வீச்சாளர்கள் கை கொடுப்பார்கள்.

கடுமையாக பந்து வீசுவோம்

கடுமையாக பந்து வீசுவோம்

எங்களது வேகப் பந்து வீச்சாளர்கள் சற்றும் இரக்கம் காட்ட மாட்டார்கள். பந்து வீச்சு மிகக் கடுமையாகவே இருக்கும். இந்திய வீரர்கள் திணறப் போவது உறுதி.

தொடக்க ஆட்டக்காரர்கள்தான் அபாயகரமானவர்கள்

தொடக்க ஆட்டக்காரர்கள்தான் அபாயகரமானவர்கள்

இந்தியாவின் தொடக்க வரிசை ஆட்டக்காரர்கள் சற்று அபாயகரமானவர்கள். அவர்களை விரைவாக ரன் குவிக்க விட்டு விட்டால் எங்களுக்கு கஷ்டமாகி விடும். எனவே விரைவிலேயே 3 அல்லது நான்கு விக்கெட்களை வீழ்த்த முனைவோம்.

பந்தை சரியா பயன்படுத்துவோம்

பந்தை சரியா பயன்படுத்துவோம்

புதிய பந்தை நாங்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள முனைவோம். முடிந்தவரை தொடக்க வரிசை ஆட்டக்காரர்களை புதிய பந்தை வைத்தே காலி செய்ய முனைவோம். அதுதான் எங்களுக்குப் பாதுகாப்பானது என்றார் டிவி்ல்லியர்ஸ்.

சிறுத்தை மாதிரிப் பாய்வாரா... ஷிகர் தவான்

சிறுத்தை மாதிரிப் பாய்வாரா... ஷிகர் தவான்

மீசைக்கார ஷிகர் தவன், ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி ஆகியோருக்கு விடப்பட்டுள்ள பகிரங்கமான சவால் இது. நிச்சயம் இந்த மூவரும் இதை சந்தித்து இந்தியாவைக் கரை சேர்ப்பார்கள் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.

Story first published: Monday, December 2, 2013, 17:17 [IST]
Other articles published on Dec 2, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+