
பயிற்சி தொடக்கம்
இந்த தொடரில் பங்கேற்பதற்காக பெவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி இந்தியா வந்துவிட்டது. வீரர்கள் அனைவருக்கும் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையின் மடிவுகள் நெகட்டிவ் என வந்துவிட்டது. இதனையடுத்து டெல்லி கோட்லா மைதானத்தில் தென்னாப்பிரிக்க வீரர்கள் பயிற்சியை தொடங்கினர்.

வீரர்களுக்கு விடுமுறை
அதே வேலையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்ற தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பணிச்சுமையை குறைக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, இதனால் டி காக், டேவிட் மில்லர் போன்ற வீரர்கள் இன்னும் தென்னாப்பிரிக்க அணியுடன் இணைய வில்லை.

இந்திய வீரர்கள் வருகை
டேவிட் மில்லர் தற்போது குடும்பத்துடன் மாலத்தீவில் விடமுறையை கொண்டாடுகிறார். இந்த நிலையில், டி20 தொடரில் விளையாட உள்ள இந்திய வீரர்கள் இன்று அல்லது நாளை நாளைக்குள் டெல்லிக்கு வந்த பயிற்சியை தொடங்கி விடுவவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிசிசிஐ முடிவு
இந்த நிலையில், கொரோனாவின் தாக்கம் குறைகிறது என்று இந்தியா, தென்னாப்பிரிக்க தொடரில் தீவிர பயோ பபுள் விதியை விலக்கி கொள்ளலாம் என்று பிசிசிஐ முடிவு எடுத்தது.இதனால், 2 நாளுக்கு ஒருமுறை சோதனை, வீரர்கள் வெளியே செல்ல கூடாது போன்ற கட்டுப்பாடுகள் நீக்கப்படகின்றன. ஆனால், கடந்த 4, 5 நாட்களாக இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது. அப்படி இருக்க பயோ பபுள் இல்லை என்றால் வீரர்களின் பாதுகாப்புக்கும், தொடரின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications