Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SA T20: இதான்யா டி20 மேட்ச்.. கடைசி பந்து வரை திக்திக்.. போராடி வென்ற டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ்

டர்பன்: தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ டி20 தொடரில் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டி கடைசி பந்து வரை விறுவிறுப்பாக சென்றது.

கடைசி ஒரு பந்தில் நான்கு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி ஒரு ரன் மட்டுமே எடுத்தது. இதை அடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் மொத்தம் 20 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. டர்பன் அணி 8 சிக்ஸர்களும், பிரிட்டோரியா அணி 12 சிக்ஸர்களும் அடித்தன.

sa t20 2025 durban super giants paarl royals 20 2025


இரு அணி வீரர்களும் அதிக சிக்ஸர்களை விளாசியதால் இரண்டு அணிகளுமே 20 ஓவர்களில் 200 ரன்களை தாண்டி ஸ்கோரை குவித்தன. முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் முதல் மூன்று வீரர்களும் அபாரமாக ரன் சேர்த்தனர்.

துவக்க வீரர் பிரைஸ் பார்சன்ஸ் 28 பந்துகளில் 47 ரன்களும், பிரீட்ஸ்கே 20 பந்துகளில் 33 ரன்களும் எடுத்தனர். கேன் வில்லியம்சன் 40 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்தார். அடுத்து டி காக் 15 ரன்களும், அதிரடி பேட்ஸ்மேன் கிளாசன் டக் அவுட்டும் ஆனார்கள். அதன் பின் வியான் முல்டர் அதிரடியாக ஆடினார். அவர் 19 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்தார். 4 ஃபோர் மற்றும் 3 சிக்ஸ் அடித்து இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 236.84 என்பதாக இருந்தது.

பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியில் அனைத்து பவுலர்களும் அதிக ரன்களை வாரி இறைத்த நிலையில் செனூரன் முத்துசாமி 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அடுத்து பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்களில் 210 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் களமிறங்கியது.

அந்த அணியின் துவக்க வீரர்கள் வில் ஜேக்ஸ் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் 12 ஓவர்கள் வரை களத்தில் நின்று முதல் விக்கெட்டுக்கு 154 ரன்கள் சேர்த்தனர். அவர்கள் இருவரும் சரமாரியாக சிக்ஸர்களை அடித்தனர். ரஹ்மானுல்லா 43 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்தார். அவர் 3 ஃபோர் மற்றும் 7 சிக்ஸ் அடித்து இருந்தார்.

அவர் ஆட்டம் இழந்து சென்ற பின் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி வரிசையாக விக்கெட்களை இழந்தது. வில் ஜாக்ஸ் 35 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்து 15 வது ஓவரில் ஆட்டம் இழந்தார். அவர் 3 ஃபோர் மற்றும் 5 சிக்ஸ் அடித்து இருந்தார். அதன் பின் வந்த வீரர்கள் யாரும் நீண்ட நேரம் தாக்கு பிடித்து ஆடவில்லை.

இதனிடையே கடைசி மூன்று ஓவர்களில் 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ். விக்கெட்டுகள் இழந்தாலும் அந்த அணி வெற்றி பெறும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் 18 வது ஓவர் மற்றும் 20 வது ஓவரை வீசிய நவீன் உல் ஹக் அபாரமாக ரன்களை கட்டுப்படுத்தி டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார்.

18 வது ஓவரில் நவீன் உல் ஹக் 4 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஜேம்ஸ் நீஷம் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து 19 வது ஓவரை கேசவ் மகாராஜ் 3 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து லியாம் லிவிங்ஸ்டன் விக்கெட்டை வீழ்த்தினார். ஆறு விக்கெட் இழந்த நிலையில் கடைசி ஓவரில் 14 ரன்கள் எடுத்தால் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது.

கடைசி ஓவரை வீசிய நவீன் உல் ஹக் ஒரு ஃபோர் மட்டுமே விட்டுக் கொடுத்தார். கடைசி பந்தில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களத்தில் இருந்த ஸ்டீவ் ஸ்டோக் லெக் பைஸ் மூலம் 1 ரன் மட்டுமே ஓடினார். கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுக்கப்பட்டன. இதை அடுத்து டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Story first published: Saturday, January 11, 2025, 9:11 [IST]
Other articles published on Jan 11, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+