Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

AFG vs SA: இமாலய வெற்றி.. அரண்டு போன தென்னாப்பிரிக்கா.. ஆப்கானிஸ்தான் அபாரம்.. ஒருநாள் தொடரை வென்றது

ஷார்ஜா: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றி கிரிக்கெட் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது ஆப்கானிஸ்தான் அணி. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஏற்கனவே வென்று இருந்த ஆப்கானிஸ்தான் அணி, இரண்டாவது போட்டியில் 177 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.

இதன் மூலம் ஒருநாள் தொடரையும் 2 - 0 என்ற கணக்கில் வென்றது ஆப்கானிஸ்தான் அணி. இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 316 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் அபாரமாக பேட்டிங் செய்து 110 பந்துகளில் 105 ரன்கள் சேர்த்தார். இது அவரது ஏழாவது ஒருநாள் போட்டி சதமாகும். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்காக அதிக ஒரு நாள் போட்டி சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் செய்தார்.

sa vs afg south africa afghanistan

அடுத்து ரஹ்மத் ஷா 50 ரன்களும், அஸ்மத்துல்லா ஓமர்ஜாய் 86 ரன்களும் சேர்த்தனர். கடைசி ஓவர்களில் அதிரடியாக ரன் சேர்த்த அஸ்மத்துல்லா 50 பந்துகளில் 86 ரன்கள் சேர்த்தார். அவர் ஐந்து ஃபோர் மற்றும் ஆறு சிக்ஸ் அடித்து இருந்தார். 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு ஆப்கானிஸ்தான் 311 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. வியான் முல்டர் ஆறு ஓவர்களில் 54 ரன்கள் விட்டுக் கொடுத்து இருந்தார்.

அடுத்து தென்னாப்பிரிக்கா அணி சேஸிங் செய்தது. அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா 38 ரன்கள் சேர்த்தார். டோனி டி ஜோர்ஜி 31 ரன்கள் சேர்த்தார். அவர்கள் இருவரும் மிகவும் நிதானமாக ஆடினர். மூன்றாவதாக வந்த ரீசா ஹென்ரிக்ஸ்-உம் மிகவும் நிதானமாகவே பேட்டிங் செய்தார். அவர் 34 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்தார். கிட்டத்தட்ட டெஸ்ட் போட்டி போலவே தென்னாபிரிக்க அணி பேட்டிங் செய்தது.

அதிரடியாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட எய்டன் மார்கிரம் 30 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இந்த நான்கு பேட்ஸ்மேன்களும் ஆட்டம் இழந்து பின் வந்த அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கத்தில் வரிசையாக ஆட்டம் இழந்தனர். 34.2 ஓவர்களில் 134 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது தென்னாப்பிரிக்கா.

ஆப்கானிஸ்தான் அணியில் சிறப்பாக வந்து வீசிய ரஷீத் கான் ஒன்பது ஓவர்களில் 19 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். கரோட்டி 6.2 ஓவர்கள் பந்து வீசி 26 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அஸ்மத்துல்லா ஒரு விக்கெட் வீழ்த்தினார். ஆப்கானிஸ்தான் அணியின் சிறப்பான செயல்பாட்டால் அந்த அணி 177 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது. இதுவே ஆப்கானிஸ்தான் அணியின் சிறந்த ஒருநாள் போட்டியின் வெற்றியாகும்.

Story first published: Saturday, September 21, 2024, 7:16 [IST]
Other articles published on Sep 21, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+