For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்த டீம் தேறவே தேறாது.. ஆப்கனை வீழ்த்தி கடுப்பேத்திய தென்னாப்பிரிக்கா.. என்ன பண்ணாங்க தெரியுமா?

கார்டிப் : உலகக்கோப்பை லீக் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தன் முதல் வெற்றியை பெற்றது தென்னாப்பிரிக்கா.

தென்னாப்பிரிக்கா அணி இந்த தொடரில் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து மிக மோசமான நிலைமையில் இருந்தது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றி அந்த அணிக்கு நம்பிக்கை அளித்து உதவும் என எதிர்பார்க்கப்பட்டது.

SA vs AFG Cricket World cup 2019 : South Africa vs Afghanistan match result and higlights

ஆனால், இந்த வெற்றி எந்த வகையில் அந்த அணிக்கு உதவும்? அப்படி ஒரு ஆட்டம் ஆடினார் தென்னாப்பிரிக்காவின் ஹஷிம் ஆம்லா!

தென்னாப்பிரிக்கா செய்த காமெடியை பார்க்கும் முன் ஆப்கானிஸ்தான் செய்த பலே அணித் தேர்வு குறித்து பார்ப்போம். இந்த உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் ஆடிய மூன்று போட்டிகளில் அதிக ரன் எடுத்தவர் நஜிபுல்லா சத்ரான். அவரை ஓரமாக உட்கார வைத்து விட்டு, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாட வந்தது.

தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கில் பந்தை தடவி வந்தது. சுத்தமாக அதிரடி காட்டவில்லை. துவக்க வீரர்கள் ஜஜாய் 22, நூர் அலி 32 ரன்கள் எடுத்தனர், கடைசி நேரத்தில் ரஷித் கான் 35 ரன்கள் குவித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லாம் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஆப்கானிஸ்தான் அணி 34.1 ஓவர்களில் 125 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

ஆப்கானிஸ்தான் இன்னிங்க்ஸ் இடையே இரண்டு முறை மழை குறுக்கிட்டது. அதனால், போட்டி 48 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அது எந்த வகையிலும் போட்டியை பாதிக்கவில்லை. டிஎல்எஸ் முறைப்படி, தென்னாப்பிரிக்கா அணிக்கு 127 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

தென்னாப்பிரிக்கா எப்படியும் 20 ஓவர்களுக்குள் வெற்றி பெற்று விடும் என்றே அனைவரும் எண்ணினர். துவக்க வீரர் டி காக் முதலில் நிதானம் காட்டி விட்டு பின்னர் வேகம் எடுத்தார். அவர் 23வது ஓவரில் 72 பந்துகளில் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அப்போது 65 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து இருந்தார் ஹஷிம் ஆம்லா.

அவர் ஏற்கனவே பார்ம் அவுட் என்பதால், அதை மீட்க இப்படி ஆடுகிறார் போலும், வெற்றிக்கு வெறும் 23 ரன்கள் தான் தேவை என்பதால் தென்னாப்பிரிக்கா அணி லோயர் ஆர்டரில் அதிரடியாக ஆடும் பெஹ்ளுக்வாயோவை களமிறக்கியது. அவர் ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற வேகத்தில் ஆடி அணியை வெற்றி பெற வைத்தார்.

ஆனால், அந்த கடைசி 23 ரன்களை அடிக்க மட்டும் 6 ஓவர்கள் எடுத்துக் கொண்டது தென்னாப்பிரிக்கா. ஹஷிம் ஆம்லா, 65 பந்துகளில் 34 என்ற நிலையில் இருந்து செமையாக டொக்கு வைத்து 83 பந்துகளில் 41 ரன்கள் என்ற நிலைக்கு வந்தார்.

இதைக் கண்ட ரசிகர்கள் மனம் வெறுத்தனர். மிகப் பெரும் அனுபவ வீரர் ஆம்லா, வெற்றிக்கு அருகே வந்த பின்னும், 9 விக்கெட்கள் மீதமிருந்தும், இப்படி மோசமாக ஆடியது தென்னாப்பிரிக்க அணிக்கு எந்த வகையில் நம்பிக்கை அளிக்கப் போகிறது என்று கேட்கிறார்கள் விமர்சகர்கள்.

Story first published: Sunday, June 16, 2019, 1:06 [IST]
Other articles published on Jun 16, 2019
English summary
SA vs AFG Cricket World cup 2019 : South Africa vs Afghanistan match result and higlights
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+