Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆப்கானிஸ்தானுக்கு ஐசிசி செய்த துரோகம்.. தோல்விக்கு இது தான் காரணம்.. உண்மையை புட்டு வைத்த வாஹன்

டிரிண்டாட் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முதல் முறையாக தகுதி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவை இன்று சந்தித்தது.இந்தப் தொடரில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வங்கதேசம் போன்ற அணிகளை ஆப்கானிஸ்தான் வீழ்த்தியது.

இதனால், இம்முறை ஆப்கானிஸ்தான் இறுதி போட்டி வரை செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் தென்னாப்பிரிக்க அணி சுக்குநூறாக உடைத்து இருக்கிறது. டிரிண்டாட் பகுதியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி 56 ரன்களில் சுருண்டது.

t20 world cup

இதன் அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 8.5 ஓவர்கள் எல்லாம் ஒரு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதனால் ஆப்கானிஸ்தான் அணியை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ஆஸ்திரேலியா சென்றிருந்தாலும் கூட இந்த போட்டியில் பெரிய ரன்களை அடித்து சுவாரசியமாக மாற்றி இருக்கும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி மீது தவறு இல்லை என்று முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் திங்கட்கிழமை சென்ட் வின்சென்ட்டில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றது. அதன் பிறகு செவ்வாய்க்கிழமை முதல் அரை இறுதி போட்டியில் பங்கேற்பதற்காக ஆப்கானிஸ்தான் அணி டிரிண்டாட் சென்றது.

ஆனால் அங்கு செல்வதற்கான விமானம் 4 மணி நேரம் தாமதம் ஆகிவிட்டது. எனவே ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு ஓய்வு எடுக்கவும் பயிற்சி செய்யவும் நேரமே இல்லை. இது காரணமாக தான் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியை தழுவி இருக்கிறது. ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு உரிய மரியாதையை ஐசிசி செய்யவில்லை என்று நான் நினைக்கின்றேன் என்று மைக்கேல் வாகன் குற்றச்சாட்டு இருக்கிறார்.

மைக்கேல் வாஹனின் இந்த பதிவு ரசிகர்களின் கவனத்தைப் பெற்று இருக்கிறது. ஒரு நாள் கூட இடைவெளி இல்லாமல் அதுவும் விமானம் 4 மணி நேரம் தாமதமாகி ஆப்கானிஸ்தான் வீரர்கள் அரை இறுதி போன்ற முக்கிய போட்டியில் பங்கேற்று தோல்வியை தழுவி இருக்கிறார்கள். ஐசிசி யின் மட்டமான அட்டவணை தயாரிப்புதான் இதற்கு காரணம் என்றும் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Story first published: Thursday, June 27, 2024, 12:11 [IST]
Other articles published on Jun 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+