Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ICC தந்த பணத்தை வீணடித்தது பாகிஸ்தான்..SA vs AUS மழையால் ஆட்டம் ரத்தான நிலையில் முகமது கையிப் புகார்

ராவல்பிண்டி: சாம்பியன்ஷிப் தொடரில் மிகவும் முக்கியமான ஆட்டமாக கருதப்பட்ட தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் மோத இருந்த ஆட்டம் மழையால் ரத்தானது. இதன் மூலம் குரூப் பி பிரிவில் ஒரு பிரளயமே வெடித்திருக்கிறது.

தற்போது ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் தங்களது கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சாம்பியன்ஷிப் போட்டியில் நடத்துவதற்காக ஐசிசி பெரிய தொகையை வழங்கியது.

Champions Trophy 2025 SA vs AUS weather forecast vs steve smith

இந்த பணத்தை பயன்படுத்தி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்களது நாட்டில் உள்ள மைதானங்களை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டது. ராவல்பிண்டியில் மழை லேசாக பெய்த நிலையில், மைதானம் முழுவதும் தார்பாயால் மூடப்படவில்லை. மேலும் தண்ணீர் வெளியேறும் வசதியும் ராவல்பிண்டி மைதானத்தில் சரியாக செய்யப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப், ராவல்பிண்டி மைதானத்தை என் முழுமையாக தார் பாயால் மூடப்படாமல் இருந்தது. அதுவும் ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்கா மோதும் முக்கிய ஆட்டத்திற்கு இப்படியா செய்வீர்கள்? இது குறித்து யாரும் இதைப் பற்றி கேட்டுக் கொள்ள மாட்டார்கள்.

ஐசிசி வழங்கிய பணத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சரியாக பயன்படுத்தியதா என்று முஹம்மது கைஃப் கேள்விகளுக்கு உள்ளார். இந்த நிலையில் ராவல்பிண்டியில் இன்னும் ஒரு ஆட்டம் நடைபெற இருக்கிறது. வரும் 27ஆம் தேதி பாகிஸ்தானும் வங்கதேசமும் இந்த போட்டியில் மோதுகின்றன.

இதில் ஆறுதல் வெற்றி பெற பாகிஸ்தான் அணி முயற்சி செய்யும். இந்த சூழலில் அந்தப் போட்டிக்கும் மழை குறுக்கீடு இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அந்த போட்டியாவது சரியாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்த வேண்டும் என்றும், மைதானத்தை முழுமையாக தார்பாயால் மூடப்பட வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Story first published: Tuesday, February 25, 2025, 23:26 [IST]
Other articles published on Feb 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+