Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"டெஸ்ட் மேட்சுக்கு காசு வாங்காதீங்க".. காத்து வாங்கும் மைதானங்களை பார்த்து பீட்டர்சன் ஆதங்கம்

கேபெர்ஹா: தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், மைதானங்கள் ரசிகர்களின்றி வெறிச்சோடிக் கிடப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலமே கேள்விக்குறியாகி வரும் இந்தச் சூழலில், ரசிகர்களை மைதானத்திற்கு இழுக்க இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் ஒரு அதிரடியான தீர்வை முன்வைத்துள்ளார். கூட்டம் வராத மைதானங்களில் ரசிகர்களுக்கு முற்றிலும் இலவச அனுமதி வழங்க வேண்டும் என்று அவர் யோசனை கூறி உள்ளார்.

டர்பனில் நடைபெற்ற இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், 5 நாள்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 20,000-க்கும் குறைவான பார்வையாளர்களே நேரில் ஆட்டத்தைக் காண வந்தனர். இது அந்த மைதானத்தின் மொத்த இருக்கைகளில் 5-ல் ஒரு பங்கை விடக் குறைவான பரிதாப நிலையாகும். அதேபோல் கெபேர்ஹாவில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியிலும் பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே கிடக்கின்றன. 3-வது நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி சிறப்பாக ஆடி ஆட்டத்திற்குள் மீண்டு வந்தபோதும், மைதானத்தில் ஆட்களே இல்லாததைக் கண்டு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் வேதனை தெரிவித்திருந்தார்.

SA vs AUS Kevin Pietersen Urges Free Entry for Fans to Save Test Cricket Amid Empty Stadiums

இதுகுறித்து தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள கெவின் பீட்டர்சன், "டெஸ்ட் போட்டிகளுக்கு கூட்டம் சேராத மைதானங்களில் ரசிகர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கி உள்ளே அனுமதிக்க வேண்டும். கிரிக்கெட் வாரியங்கள் தங்களது பிரான்சைஸ் டி20 தொடர்கள் மூலமாகவே கோடிக்கணக்கான வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும். டர்பன் மற்றும் போர்ட் எலிசபெத் மைதானங்களில் டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த அற்பத் தொகை, மைதானத்தில் ஒருவர்கூட இல்லாமல் காலியாகக் கிடப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்தாது" என்று சாடியுள்ளார்.

அத்துடன் பாரம்பரிய டெஸ்ட் கிரிக்கெட்டில் வெள்ளை நிற ஜெர்சிக்கு பின்னால் வீரர்களின் பெயர்களும் எண்களும் அச்சிடப்படுவதை தான் விரும்பவில்லை என்றும், பழைய பாணியிலான தூய வெள்ளை ஆடைகளே டெஸ்ட் போட்டிக்கு அழகு என்றும் பீட்டர்சன் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்கள் வராதது குறித்து உள்ளூர் கிரிக்கெட் சங்கம் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், பீட்டர்சனின் இந்த இலவச டிக்கெட் யோசனை கிரிக்கெட் உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

Story first published: Thursday, October 22, 2026, 11:53 [IST]
Other articles published on Oct 22, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+