Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் உலக சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்.. ஜோ ரூட், டிராவிட் சாதனையைத் தகர்த்தார்

டர்பன்: தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டர்பன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் 3-வது நாள் ஆட்டத்தில், ஸ்லிப் திசையில் நின்ற ஆஸ்திரேலிய அணியின் மூத்த வீரர் ஸ்டீவ் ஸ்மித் அடுத்தடுத்து 3 அசாத்திய கேட்ச்களைப் பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இதன் மூலம் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் விக்கெட் கீப்பர் அல்லாத ஒரு ஃபீல்டராக அதிக கேட்ச்களைப் பிடித்த வீரர் என்ற மாபெரும் உலக சாதனையை படைத்துள்ளார். முதலில் நாதன் லியோன் பந்துவீச்சில் டெம்பா பவுமாவின் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டை முன்கூட்டியே கணித்துப் பிடித்தார். இது ஸ்மித்தின் 220-வது கேட்ச்சாக அமைந்தது. லியோன் பந்துவீச்சில் ஸ்மித் பிடித்த 64-வது கேட்ச் இதுவாகும். தொடர்ந்து பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் டேவிட் பெடிங்ஹாம் விக்கெட்டை இடதுபுறமாக டைவ் அடித்துப் பிடித்தார். இது அவரது டெஸ்ட் வாழ்க்கையின் 221-வது கேட்ச்சாகப் பதிவானது.

SA vs AUS Steve Smith Breaks Rahul Dravid And Joe Root World Record For Most Catches In Test Cricket History

இந்த கேட்ச் மூலம் இங்கிலாந்தின் ஜோ ரூட்டை பின்னுக்குத் தள்ளி, சர்வதேச டெஸ்ட் வரலாற்றில் அதிக கேட்ச் பிடித்த வீரர் என்ற புதிய உலக சாதனையை ஸ்டீவ் ஸ்மித் படைத்தார். இதன் மூலம் ராகுல் டிராவிட், ஜாக் காலிஸ், மார்க் வாக் ஆகிய ஜாம்பவான்களையும் அவர் முந்தியுள்ளார்.

அத்துடன் நிற்காமல் நாதன் லியோன் பந்துவீச்சில் கைல் வெரைன் கொடுத்த கடினமான வாய்ப்பை வலதுபுறமாகப் பாய்ந்து ஒற்றைக் கையில் தூக்கி தனது 222-வது கேட்ச்சையும் பதிவு செய்தார். இவரது இந்த அசாத்திய ஃபீல்டிங்கைக் கண்டு களத்தில் நின்ற மார்னஸ் லபுஷேன் உள்ளிட்ட சக வீரர்கள் பாராட்டினர்.

இந்திய ஜாம்பவான் ராகுல் டிராவிட் 210 கேட்ச்கள் பிடித்ததே பல ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக சாதனையாக இருந்தது. அந்த சாதனையை சில மாதங்களுக்கு முன் ஜோ ரூட் முறியடித்து இருந்தார். அதை தற்போது ஸ்டீவ் ஸ்மித் முந்தி இருக்கிறார்.

IND vs WI: இந்திய அணியில் 2 முக்கிய வீரர்கள் நீக்கம்.. ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி.. பிளேயிங் 11 என்ன?

IND vs WI: இந்திய அணியில் 2 முக்கிய வீரர்கள் நீக்கம்.. ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி.. பிளேயிங் 11 என்ன?

முன்னதாக ஆஸ்திரேலிய அணி 124 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த போது, மேட் ரென்ஷா அபாரமாக ஆடி 190 ரன்கள் குவித்து அணியை மீட்டார். இதனால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 390 ரன்கள் குவித்தது. அடுத்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 284 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 106 ரன்கள் முன்னிலை பெற்றது.

Story first published: Sunday, October 11, 2026, 19:31 [IST]
Other articles published on Oct 11, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+