Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு பெரும் அவமானம்.. வரலாற்று சாதனை படைத்த வங்கதேசம்.. கிரிக்கெட் உலகில் புதிய மைல்கல்

சென்சூரியன்: தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

Recommended Video

Bangladesh record historic ODI series victory over South Africa | OneIndia Tamil

இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்ற நிலையில், தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி நேற்று இரவு நடைபெற்றது.

இந்திய அணியே தென்னாப்பிபிரிக்க தொடரில் ஒரு வெற்றியை கூட பெறாத நிலையில், வங்கதேச அணி தொடரை கைப்பற்றும் உத்வேகத்தில் களமிறங்கியது.

தடுமாற்றம்

தடுமாற்றம்

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை செய்ய தீர்மானித்தது. அதிரடியாக விளையாட முற்பட்டு குயின்டன் டி காக் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜெனிமான் மாலன் பொறுமையாக விளையாடிய 39 ரன்கள் சேர்த்தார். கெயில் வெர்ரைன் 9 ரன்களும், பெவுமா 2 ரன்களும் ஆட்டமிழக்க, வெண்டர் டுசன் 4 ரன்களில் வெளியேற தென்னாப்பிரிக்க அணி 83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

154 ரன்களுக்கு சுருண்டது

154 ரன்களுக்கு சுருண்டது

இறுதியில் சிஎஸ்கே வீரர் பிரிட்டோரியஸ் 29 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்தார். கேசவ் மெகராஜ் 28 ரன்களும் ஆட்டமிழக்க, ரபாடா 4 ரன்களில் வெளியேறினார். லுங்கி நிகிடி டக் அவுட்டாக தென்னாப்பிரிக்க அணி 154 ரன்களுக்கு சுருண்டது. சிறப்பாக விளையாடிய டஸ்கின் அகமது 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அபார ஆட்டம்

அபார ஆட்டம்

155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி வீரர்கள் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். குறிப்பாக கேப்டன் தமிம் இக்பால் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தார். அவருக்கு ஆதரவாக லிட்டன் தாசும் நிதானமாக களத்திற்கு நிற்க, இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க வீரர்கள் திணறினர்.

சாதனை வெற்றி

சாதனை வெற்றி

முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 127 ரன்கள் சேர்த்தது. தமிம் இக்பால் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 87 ரன்கள் எடுத்தார். இதனால் வங்கதேச அணி 26.3வது ஓவரில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக வங்கதேச அணி தென்னாப்பிரிக்க மண்ணில் ஒருநாள் தொடரை வென்றது.

Story first published: Thursday, March 24, 2022, 11:47 [IST]
Other articles published on Mar 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+