Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சோத்துலையும் அடி.. சேத்துலையும் அடி.. புலி பொம்மை.. தென்னாப்பிரிக்காவை வைச்சு செய்யும் ரசிகர்கள்!

Recommended Video

வங்கதேசத்துக்கு எதிரான 2 வது போட்டியிலும் தென் ஆப்ரிக்கா அணி தோல்வி

லண்டன் : தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் இடையே ஆன போட்டியில் வங்கதேசம் மிரட்டல் வெற்றி பெற்றது. 21 ரன்கள் வித்தியாசத்தில் பலமான அணியாக கருதப்பட்ட தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.

தன் முதல் லீக் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது தென்னாப்பிரிக்கா. அப்போது இங்கிலாந்து வலுவான அணி என்ற சமாதானம் கூறப்பட்டது.

ஆனால், பலம் குறைந்த அணியாக கூறப்பட்டு வந்த வங்கதேச அணியிடம், தென்னாப்பிரிக்கா எந்த விதத்திலும் ஆதிக்கம் செலுத்தாமல் தோல்வி அடைந்தது அதிர்ச்சி அளித்தது.

பலத்த கிண்டல்

பலத்த கிண்டல்

இதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணியை பலரும் மோசமாக கிண்டல் செய்து வருகின்றனர். ஏற்கனவே, உலகக்கோப்பை நாக்-அவுட் சுற்று என்றால் தென்னாப்பிரிக்கா அணிக்கு அதிர்ஷ்டம் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். இப்போது, அதற்கும் மேலே, லீக் போட்டிகளிலேயே தென்னாப்பிரிக்கா தடுமாறி வருகிறது.

நெக்ஸ்ட் இந்தியா

நெக்ஸ்ட் இந்தியா

அதை வைத்தும், ஏபி டி வில்லியர்ஸ் அணியில் இல்லை என்பதை வைத்தும் கிண்டல் செய்து வருகிறார்கள். சிலர் தென்னாப்பிரிக்கா அணியின் அடுத்த போட்டி இந்தியாவுடன் என்பதை வைத்தும் பயங்கரமாக கிண்டல் செய்துள்ளனர்.

சேத்துலையும் அடி

இங்கிலாந்து, வங்கதேச அணிகளிடம் பெற்ற தோல்விகளை குறித்து, சோத்துலையும் அடி வாங்கியாச்சு.. சேத்துலையும் அடி வாங்கியாச்சு என வடிவேலு காமெடியை வைத்து தென்னாப்பிரிக்காவை கலாய்த்து இருக்கிறார்கள்.

உலகக்கோப்பை என்றால்..

தென்னாப்பிரிக்கா சாதாரண ஒருநாள் போட்டிகள் என்றால் புலியாகவும்.. உலகக்கோப்பை தொடர் என்றால் புலி பொம்மையாகவும் மாறி விடுகிறதாம்.

ஆம்லா, டி வில்லியர்ஸ் இல்லையே!

ஹஷிம் ஆம்லா, ஏபி டி வில்லியர்ஸ் இல்லையே என வருத்தப்பட்டு கண்ணீர் விடுகிறார்.

டி வில்லியர்ஸ் என்ன செய்கிறார்

ஏபி டி வில்லியர்ஸ் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும், தொடர்ந்து டி20 போட்டிகளில் கலக்கி வருகிறார். உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணி கவலைக்கிடமாக இருக்கும் போது டி வில்லியர்ஸ் மட்டும் ஜாலியாக இருக்கிறாராம்.

200 ரன் கூட தேறாது

வங்கதேசம் 331 ரன்கள் இலக்கு நிர்ணயித்த உடன் ஒருவர் போட்டுள்ள பதிவு. பெரிய ஸ்கோரை சேஸ் செய்ய வேண்டும். ஆனால், 200 ரன் கூட தென்னாப்பிரிக்கா தாண்டாதே.. என கண்ணீர் விடுகிறார்.

அடுத்த மேட்ச்

அடுத்த மேட்ச் இந்தியா.. என பலரும் இப்படி அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Story first published: Monday, June 3, 2019, 0:34 [IST]
Other articles published on Jun 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+