Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாவம்.. அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு! கேட்ச்சில் தப்பித்து.. விக்கெட்டை பறிகொடுத்த டி காக்! #SAvsBAN

Recommended Video

World Cup 2019 SAvsBAN | கேட்ச்சில் தப்பித்து, விக்கெட்டை பறிகொடுத்த டி காக்!

லண்டன் : தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் இடையே ஆன உலகக்கோப்பை தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்காவின் டி காக் குழப்பத்தால் ரன் அவுட் ஆகி அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தினார்.

2019 உலகக்கோப்பை தொடரின் முதல் லீக் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தென்னாப்பிரிக்கா தோல்வி அடைந்து இருந்தது.

மோசமான தோல்வியுடன் தொடரை துவக்கிய தென்னாப்பிரிக்கா அடுத்த போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தோடு இந்தப் போட்டியில் களமிறங்கியது.

லுங்கி நிகிடி இல்லை

லுங்கி நிகிடி இல்லை

தென்னாப்பிரிக்கா அணியின் வேகப் பந்துவீச்சாளர் லுங்கி நிகிடி நான்கு ஓவர்கள் வீசிய நிலையில், தசைப் பிடிப்பின் காரணமாக போட்டியில் இருந்து பாதியில் விலகினார். இது தென்னாப்பிரிக்கா அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

வங்கதேசம் அதிரடி

வங்கதேசம் அதிரடி

இது ஒருபுறம் இருக்க, வங்கதேசம் பேட்டிங்கில் வெளுத்து வாங்கியது. தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் பாப் டு ப்ளேசிஸ் பந்துவீச்சாளர்களை மாற்றி மாற்றிப் பார்த்தும் எந்த பயனுமில்லை. சரியாக கூட்டணி அமைத்து, அதிரடியாக ஆடிய வங்கதேச அணி 50 ஓவர்களில் 330 ரன்கள் குவித்தது.

கேட்ச் வாய்ப்பு

கேட்ச் வாய்ப்பு

சவாலான இலக்கை நோக்கி ஆடிய தென்னாப்பிரிக்கா அணிக்கு துவக்க வீரர்கள், டி காக் - எய்டன் மார்கிரம் சிறப்பான துவக்கம் அளித்தனர். இருவரும் சேர்ந்து 49 ரன்கள் சேர்த்த நிலையில், 10வது ஓவரின் 4வது பந்தை சந்தித்தார் டி காக். மெஹிதி ஹாசன் பந்து வீசினார். டி காக் பந்தை அடிக்க முயன்றார். பந்து எட்ஜ் ஆகி சென்றது. விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம் கேட்ச்சை தவற விட்டார்.

ஒரே குழப்பம்

ஒரே குழப்பம்

கை மீறிச் சென்ற பந்தை எடுக்க ஓடினார் ரஹீம். அதே சமயம், ரன் ஓடலாமா? என்ற குழப்பத்தில் இருந்த டி காக், பந்தை கவனிக்காமல், எதிரில் இருந்த சக வீரர் மார்கிரம் முகத்தை பார்த்து விட்டு ரன் ஓட முற்பட்டார்.

டி காக் ரன் அவுட்

டி காக் - மார்கிரம் இருவரும் ரன் ஓட முன்னே வந்துவிட்டு, பந்தை கீப்பர் ரஹீம் எடுத்து விட்டதால், மீண்டும் தங்கள் இடத்துக்கு ஓடினர். எனினும், சரியாக பந்தை த்ரோ செய்த ரஹீம், டி காக்கை ரன் அவுட் செய்தார்.

பின்னடைவு

பின்னடைவு

சிறிய குழப்பத்தால், கேட்ச் வாய்ப்பில் தப்பிய டி காக், ரன் அவுட் ஆனார். இதனால், தென்னாப்பிரிக்கா அணிக்கு சேஸிங்கில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. தன் முதல் விக்கெட்டை மிக மோசமான முறையில் இழந்த தென்னாப்பிரிக்கா, அடுத்து வந்த வீரர்கள் ரன் குவித்தாலும், ரன் ரேட்டை சமாளிக்க முடியாமல் திணறியது.

Story first published: Sunday, June 2, 2019, 22:31 [IST]
Other articles published on Jun 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+