Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SA vs BAN : அடப்பாவமே.. பலவீனமாக மாறிய தென்னாப்பிரிக்கா.. “பலமான” வங்கதேசம் மிரட்டல் வெற்றி!!

Recommended Video

வங்கதேசத்துக்கு எதிரான 2 வது போட்டியிலும் தென் ஆப்ரிக்கா அணி தோல்வி

லண்டன் : தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் இடையே ஆன 2019 உலகக்கோப்பை தொடரின் ஐந்தாவது லீக் போட்டி லண்டன், ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அதிரடியால், தென்னாப்பிரிக்கா அணியை மிரட்டியது. தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சு பெரியளவில் எடுபடவில்லை.

50 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 330 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்கா பலவீனமான அணியாக மாறி, பேட்டிங்கிலும் சொதப்பி தோல்வி அடைந்தது.

வங்கதேசம் தாக்குப்பிடிக்குமா?

வங்கதேசம் தாக்குப்பிடிக்குமா?

உலகக்கோப்பை தொடரில் தன் முதல் லீக் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்த தென்னாப்பிரிக்கா, வங்கதேச அணியை வீழ்த்தும் முனைப்பில் களமிறங்கியது. இதுவரை நடந்த 2019 உலகக்கோப்பை லீக் போட்டிகளில், ஆசிய அணிகள் இங்கிலாந்து ஆடுகளங்களில், வேகப் பந்துவீச்சில் தடுமாறி வருகின்றன. இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா அணியின் வேகப் பந்துவீச்சை வங்கதேச அணி தாக்குப்பிடிக்குமா? என்பதே இந்தப் போட்டிக்கு முன் பலரின் சந்தேகமாக இருந்தது.

வங்கதேசம் பேட்டிங்

வங்கதேசம் பேட்டிங்

ஆனால், வங்கதேச அணி அதிரடியாக பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 330 ரன்கள் குவித்தது. வங்கதேச அணியில் சௌம்யா சர்க்கார் 42, ஷகிப் அல் ஹசன் 75, முஷ்பிகுர் ரஹீம் 78, மக்மதுல்லா 46 ரன்கள் சேர்த்து 330 ரன்களை எட்ட முக்கிய காரணமாக இருந்தனர்.

லுங்கி நிகிடி காயம்

லுங்கி நிகிடி காயம்

தென்னாப்பிரிக்கா அணியின் பந்து வீச்சு மிக சராசரியாக அமைந்தது. லுங்கி நிகிடி நான்கு ஓவர்கள் மட்டுமே வீசிய நிலையில், காயம் காரணமாக பாதி போட்டியிலேயே விலகினார். இதனால், ஆறு ஓவர்களை பகுதி நேர பந்துவீச்சாளர்களை வைத்து சமாளித்தது தென்னாப்பிரிக்கா.

தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு

தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு

தென்னாப்பிரிக்கா அணியில் இம்ரான் தாஹிர், கிறிஸ் மோரிஸ், பெஹ்ளுக்வாயோ தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். மத்திய ஓவர்களில் இம்ரான் தாஹிர் வங்கதேச அணியின் ஷகிப் அல் ஹசன், முஹம்மது மிதுன் ஆகியோரை வீழ்த்தியது திருப்புமுனையாக அமைந்தது. எனினும், வங்கதேசம் அதை சமாளித்து 330 ரன்களை எட்டியது.

தென்னாப்பிரிக்கா பேட்டிங்

தென்னாப்பிரிக்கா பேட்டிங்

331 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி ஆடத் துவங்கிய தென்னாப்பிரிக்கா அணியின் துவக்க வீரர் டி காக் 23 ரன்கள் எடுத்த நிலையில், ரன் அவுட் ஆகி வெளியேறினார். எய்டன் மார்கிரம் 45, பாப் டு ப்ளேசிஸ் 62 ரன்கள் குவித்து நம்பிக்கை அளித்தனர்.

சிக்கலில் தென்னாப்பிரிக்கா

சிக்கலில் தென்னாப்பிரிக்கா

அடுத்து வந்த டேவிட் மில்லர் 38, டஸ்ஸன் 41, டுமினி 45 ரன்கள் குவித்தனர். எனினும், 36வது ஓவர் முதல் தொடர்ந்த இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்தது தென்னாப்பிரிக்கா. ஒரு கட்டத்தில் ஒவ்வொரு பந்துக்கும் 2 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு சென்றது.

ரன் ரேட் அழுத்தம்

ரன் ரேட் அழுத்தம்

ரன் ரேட் அழுத்தத்தில் இருந்து மீள முடியாமல் தவித்த அந்த அணி, தோல்வியை நோக்கிச் சென்றது. லுங்கி நிகிடி பேட்டிங் ஆட வரமுடியாத சூழலில், 9வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரபாடா - இம்ரான் தாஹிர் கடைசி ஓவரை சந்தித்தனர். கடைசி ஓவரில் 33 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், 11 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

வங்கதேசம் வெற்றி

வங்கதேசம் வெற்றி

இதையடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பெற்றது வங்கதேசம். தென்னாப்பிரிக்கா அணி பலமான அணி வார்த்தைகளில் கூறப்பட்டாலும், களத்தில் மிக பலவீனமாக காட்சி அளித்தது. தென்னாப்பிரிக்கா அணி தான் ஆடிய முதல் இரண்டு லீக் போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. வங்கதேசம் மற்ற அணிகளுக்கு மிரட்டல் விட்டு, தன் உலகக்கோப்பை பயணத்தை துவங்கி உள்ளது.

Story first published: Sunday, June 2, 2019, 23:18 [IST]
Other articles published on Jun 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+