Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

147 டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க வீரர் ரபாடா புதிய சாதனை.. வங்கதேசம் தடுமாற்றம்

மிர்பூர்: வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அபாரமாக பந்துவீசி விக்கெட் வேட்டை நடத்தி வருகிறது. வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதில் முதல் டெஸ்ட் போட்டி மிர்பூர் நகரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய வங்கதேச வீரர்கள் தென்னாப்பிரிக்கா வீரர்களின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

sa vs ban kagiso rabada south africa vs bangladesh shakib al hasan

குறிப்பாக தென்னாப்பிரிக்க வீரர் வியான் முல்டர் வீசிய அதிவேக பந்துகளை தொடக்கூட முடியாமல் வங்கதேச வீரர்கள் தடுமாறினர். சத்மான் இஸ்லாம் 4 ரன்களிலும், கேப்டன் நஜ்மல் ஹுசைன் 7 ரன்களிலும் அடுத்தடுத்து மூல்டர் பந்துவீச்சில் வெளியேறினார். இதனை அடுத்து தென்னாப்பிரிக்க அணியின் அனுபவ வீரரான ரபாடா விக்கெட் வேட்டையில் ஈடுபட்டார்.

ரபாடாவின் பந்துவீச்சில் லிட்டன் டாஸ் ஒரு ரன்னிலும், முஸ்பிகுர் ரஹீம் 11 ரன்களிலும் வெளியேறினர். 30.3 ஓவர் முடிவில் தென் வங்கதேச அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்தது. இதில் மூல்டர் மூன்று விக்கெட்டுகளும், ரபாடா இரண்டு விக்கெட்டுகளும் கைப்பற்றி இருக்கிறார்கள். இதன் மூலம் 147 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 300 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை ரபாடா பெற்றிருக்கிறார்.

ரபாடா டெஸ்ட் கிரிக்கெட்டில் 11,817 பந்துகள் வீசி 300 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதற்கு முன்பு பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனிஸ் 12602 பந்துகள் வீசி 300 விக்கெட் வீழ்த்தி இருந்தது சாதனையாக இருந்தது. தற்போது மூன்றாவது இடத்தில் மற்றொரு தென்னாப்பிரிக்க வீரரான டெல் ஸ்டையின் 12605 பந்துகளில் 300 விக்கெட்டும், நான்காம் இடத்தில் ஆலன் டொனால்ட் 13 ஆயிரத்து 672 பந்துகளில் 300 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருக்கிறார்.அதேபோன்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் மால்கோ மார்ஷல் 13,728 பந்துகள் வீசி 300 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார்.

Story first published: Monday, October 21, 2024, 13:02 [IST]
Other articles published on Oct 21, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+