Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SA vs BAN- தென்னாப்பிரிக்காவின் வெற்றியால் இந்தியாவுக்கு நெருக்கடி.. WTC பைனலுக்கு செல்வது யார்?

புனே : வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருக்கிறது. இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் பட்டியலில் தென்னாப்பிரிக்க அணி தற்போது நான்காவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்க அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி மிர்பூரில் கடந்த 21ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் தேர்வு செய்தது.

sa vs ban south africa vs bangladesh wtc 2025 ind vs nz

வங்கதேச அணியின் தொடக்க வீரர் முகமதுல் ஹசன் ஜாய் மட்டும் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் எல்லாம் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் வங்கதேச அணி 106 ரன்களில் சுருண்டது. இதனை அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் விக்கெட் கீப்பர் கேயில் வெர்ரையன் அபாரமாக விளையாடி சதம் விளாசினார்.

இதேபோன்று பவுலர் வியான் முல்டர் அரைசதம் அடிக்க தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 308 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 202 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடியது. குறிப்பாக மெஹதி ஹசன் மூன்று ரன்களின் சதத்தை தவறவிட்டார். இதேபோன்று ஜேக்கர் அலி அரை சதம் அடிக்க வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 307 ரன்கள் குவித்தது.

இதனை எடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் கடைசி இன்னிங்ஸில் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி அபாரமாக விளையாடி 22 ஓவர்களில் எல்லாம் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றியை பெற்றது. இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் தென்னாபிரிக்க அணி தற்போது 47.62 வெற்றி சதவீதத்துடன் நான்காவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

தென்னாப்பிரிக்கா தற்போது வெற்றியை பெற்று இருப்பதால் இந்திய அணி பைனலுக்கு செல்ல வேண்டும் என்றால் குறைந்தபட்சம் எஞ்சியிருக்கும் 7 டெஸ்ட் போட்டிகளில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இதேபோன்று தென்னாப்பிரிக்க அணி பைனலுக்கு வரவேண்டும் என்றால் எஞ்சி இருக்கும் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றால் போதும்.

இதில் வங்கதேசத்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டி இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் இரண்டு டெஸ்ட், பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் இரண்டு டெஸ்டில் தென்னாபிரிக்கா விளையாடுகிறது. இலங்கையை பொறுத்தவரை எஞ்சியிருக்கும் நான்கு டெஸ்டில் மூன்றில் வெற்றி பெற வேண்டும். நியூஸிலாந்த அணி விளையாடப் போகும் 5 டெஸ்டிலுமே வெல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, October 24, 2024, 13:17 [IST]
Other articles published on Oct 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+