லண்டன்: பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் நேற்று தனது 96வது வயதில் காலமானார். இதனையடுத்து, இங்கிலாந்து மக்கள் கண்ணீர் கடலில் மூழ்கினர்.

இந்த நிலையில் மகாராணி எலிசபெத்தின் மறைவு கிரிக்கெட் உலகையும் சோக கடலில் மூழ்க வைத்துள்ளது.
இங்கிலாந்தின் தேசிய விளையாட்டு கிரிக்கெட் என்பதால், இன்று நடைபெறவிருந்த அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஒத்திவைத்துள்ளது.
லண்டன் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி வியாழக்கிழமை தொடங்கியது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்ற நிலையில், இந்தப் போட்டி தொடரை தீர்மானிக்கும். ஆனால் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
இதனையடுத்து, 2வது நாள் ஆட்டம் மகாராணி எலிசபெத்தின் உயிரிழந்ததை அடுத்து கைவிடப்பட்டது. மேலும் பிரிட்டன் முழுவதும் தூக்கம் அணுசரிக்கப்படுவதால் போட்டியை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொழுதுப் போக்கு நிகழ்ச்சி இந்த நாட்களில் நடத்தப்படாது.
இந்த நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பென் ஸ்டோக்ஸ், மகாராணி எலிசபெத்க்கு கிரிக்கெட் என்றால் மிகவும் பிடிக்கும். இதனால், அவரின் நினைவாக கருப்பு பட்டை அணிந்து போட்டியை தொடருவதே சரி என்று நினைப்பதாக கருத்து தெரிவித்துள்ளார். இந்த வார இறுதியில் நடைபெறும் அனைத்து கால்பந்து ஆட்டங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.