Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாரும் வேணாம் நானே முடிக்கிறேன்.. தென்னாப்பிரிக்காவை காலி செய்த இங்கிலாந்து வீரர்.. செம டி20 சேஸிங்

கேப் டவுன் : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு சேஸிங்கில் கை கொடுத்தார் ஜானி பேர்ஸ்டோ.

அவரது அதிரடி ஆட்டத்தால் அந்த அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சு மோசமாக அமைந்தது.

டாஸ் வென்ற இங்கிலாந்து

டாஸ் வென்ற இங்கிலாந்து

இங்கிலாந்து அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலில் டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது.

பாப் டுபிளெசிஸ் சிறப்பு

பாப் டுபிளெசிஸ் சிறப்பு

தென்னாப்பிரிக்க அணிக்கு பவுமா 5 ரன்களில் ஆட்டமிழந்து சுமாரான துவக்கம் அளித்தார். டி காக் அதிரடி ஆட்டம் ஆடி 23 பந்துகளில் 30 ரன்கள் குவித்தார். பாப் டுபிளெசிஸ் சிறப்பாக ஆடினார். அவர் 30 பந்துகளில் 58 ரன்கள் குவித்து தன் ஐபிஎல் பார்மை வெளிப்படுத்தினார்.

தென்னாப்பிரிக்கா ஸ்கோர்

தென்னாப்பிரிக்கா ஸ்கோர்

டஸ்ஸன் 37, கிளாசன் 20, லிண்டே 6 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தனர். தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சேஸிங் செய்தது.

ராய் டக் அவுட்

ராய் டக் அவுட்

இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் டக் அவுட் ஆகி அதிர்ச்சி துவக்கம் அளித்தார். பட்லர் 7 ரன்கள் மட்டுமே எடுத்தார். தாவித் மலன் 19 ரன்களில் ஆட்டமிழந்தார் இங்கிலாந்து அணி 34 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தவித்தது.

ஸ்டோக்ஸ் - ஜானி பேர்ஸ்டோ ஜோடி

ஸ்டோக்ஸ் - ஜானி பேர்ஸ்டோ ஜோடி

அப்போது பென் ஸ்டோக்ஸ் - ஜானி பேர்ஸ்டோ ஜோடி இங்கிலாந்து அணியை மீட்டது. ஸ்டோக்ஸ் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோ தனி ஆளாக அணியை கரை சேர்க்க போராடி அரைசதம் கடந்தார்.

வெற்றி

வெற்றி

கேப்டன் இயான் மார்கன் 12 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவை என்ற நிலையில் பேர்ஸ்டோ ஒரு ஃபோர், ஒரு சிக்ஸ் அடித்து 19.2 ஓவரில் சேஸிங்கை வெற்றிகரமாக முடித்தார். இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அபார ஆட்டம்

அபார ஆட்டம்

பேர்ஸ்டோ 48 பந்துகளில் 86 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் நின்றார். இங்கிலாந்து அணியின் பேட்டிங் தடுமாறினாலும், பேர்ஸ்டோ தனி ஆளாக நின்று வெற்றி தேடித் தந்தார். தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சில் சொதப்பியது.

Story first published: Saturday, November 28, 2020, 12:20 [IST]
Other articles published on Nov 28, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+