For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி 5 ஓவர்களில் 48 ரன்கள்.. டி காக் ஆட்டத்தால் தப்பிய தென்னாப்பிரிக்கா.. இங்கி.க்கு சவாலான இலக்கு!

ஆன்டிகுவா : தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற 164 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதல் 10 ஓவர்களில் 87 ரன்களை சேர்த்த தென்னாப்பிரிக்கா அணி, அதன்பின் பிடியை தளர்த்தியது. இதனால் அடுத்த 10 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அணி 76 ரன்களை மட்டுமே சேர்த்தது.

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் பலம் வாய்ந்த இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. இரு அணிகளும் தங்களின் முதல் சூப்பர் 8 போட்டியில் வென்றிருந்த நிலையில், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இந்த நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் டி காக் - ஹென்ரிக்ஸ் கூட்டணி அதிரடியாக தொடங்கியது. மொயின் அலி வீசிய 2வது ஓவரிலேயே டி காக் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரியை விளாசி அசத்தினார்.

t20 world cup indian national cricket team cricket Jos buttler

தொடர்ந்து ஆர்ச்சர் வீசிய 4வது ஓவரில் 2 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 21 ரன்களை டி காக் விளாசினார். இதன் காரணமாக தென்னாப்பிரிக்கா அணி பவர் பிளே ஓவர்கள் முடிவில் 63 ரன்களை குவித்தது. ஒரு பக்கம் டி காக் அனைத்து பவுலர்களையும் பொளந்து கட்டிய போது, மற்றொரு தொடக்க வீரரான ஹென்ரிக்ஸ் பவுண்டரி கூட அடிக்க முடியாமல் தடுமாறி வந்தார். இருப்பினும் சிறப்பாக ஆடிய டி காக் 22 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்த, ஹென்ரிக்ஸ் 25 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.

இதனால் தென்னாப்பிரிக்கா அணி 10 ஓவர்களில் 87 ரன்கள் சேர்த்திருந்தது. இதன்பின் இங்கிலாந்து அணியின் விழித்துக் கொண்டது. ஸ்லோயர் பந்துகளை சிறப்பாக பயன்படுத்தி டி காக்கை 65 ரன்களில் வீழ்த்த, தேவையே இல்லாமல் அதிரடி வீரர் கிளாசன் 13 பந்துகளில் 8 ரன்கள் எடுத்த போது ரன் அவுட்டாகி வெளியேறினார். கேப்டன் மார்க்ரமும் 1 ரன்னில் ஆட்டமிழக்க, 15 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அணியின் ஸ்கோர் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்களாக இருந்தது.

இதன்பின் டேவிட் மில்லர் - ஸ்டப்ஸ் கூட்டணி இணைந்தது. அடுத்த 3 ஓவர்களில் மில்லர் அதிரடியாக ரன்களை குவிக்க, ஸ்டப்ஸ் சரியாக டைமிங் செய்ய முடியாமல் திணறினார். பின்னர் 19வது ஓவரை வீச சாம் கரண் வந்தார். இதில் ஒரு சிக்ஸ் உட்பட 14 ரன்கள் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து கடைசி ஓவரின் முதல் பந்திலேயே மில்லர் 43 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, 2வது பந்தில் யான்சன் டக் அவுட்டாகினார். இறுதியாக தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிர்கு 163 ரன்களை சேர்த்துள்ளது.

Story first published: Friday, June 21, 2024, 21:53 [IST]
Other articles published on Jun 21, 2024
English summary
SA vs ENG : South Africa set a target of 164 runs for England to win in the Super 8 of the T20 World Cup 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+