Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா - தென்னாப்பிரிக்கா 2வது டி20 போட்டி நடக்குமா? வானிலை அறிக்கை சொல்வது என்ன?

கேபெர்ஹா: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ள இரண்டாவது டி20 மழையால் பாதிக்கப்படலாம் என தெரிய வந்துள்ளது. தற்போது வெளியாகி உள்ள வானிலை அறிக்கையில் போட்டி நேரத்திற்கு சில மணி நேரங்கள் முன்பு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்தப் போட்டி கேபெர்ஹா நகரில் நடைபெற உள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு துவங்க வேண்டும். ஆனால், போட்டிக்கு முன்னதாக மாலை 7 மணி அளவில் 49 முதல் 54 சதவிகித அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை சுட்டிக் காட்டி உள்ளது.

ind vs sa india south africa 20

அதேபோல இரவு 8 மணி அளவில் 63 சதவிகித மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே இந்த போட்டி மழையால் தாமதமாக துவங்கலாம் என வானிலை அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. மேலும், இந்த போட்டியின் இரண்டாம் பாதியின் போது 40 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

எனவே, இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி மழையால் போட்டிக்கு முன்போ, அல்லது போட்டியின் போதோ பாதிக்கப்படலாம். அதற்கேற்ப இரண்டு அணிகளும் திட்டமிட வேண்டிய நிலையில் உள்ளன.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இந்த நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் மூன்று போட்டிகள் மீதம் உள்ளன. ஒருவேளை இரண்டாவது போட்டி மழையால் கைவிடப்பட்டால், அடுத்த இரண்டு போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியில் வென்றால் கூட தொடரை கைப்பற்றி விட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, November 10, 2024, 16:51 [IST]
Other articles published on Nov 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+