Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA- பெரியவங்களுக்கு சின்ன பசங்க ஊக்கம் தராங்க! பேட்டிங்கில் சொதப்பி விட்டோம்- ஏய்டன் மார்கரம்

மும்பை : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. 125 ரன்கள் இந்திய அணி வெற்றி இலக்காக நியமித்தது. ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைத்து நின்று ஆடாமல் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

இதனால் தென்ஆப்பிரிக்க அணி 86 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் யாரும் எதிர்ப்பாராத வகையில் ஜெரால்ட் கோயிடுச்சே அபாரமாக விளையாடி 9 பந்துகளில் 19 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 41 பந்துகளின் 47 ரன்கள் சேர்க்க தென்னாப்பிரிக்க அணி ஒரு ஓவர் எஞ்சிய நிலையில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

ind vs sa suryakumar yadav hardik pandya


இந்த நிலையில் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள தென்னாபிரிக்க அணி கேப்டன் ஏய்டன் மார்க்கரம், நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டோம். இந்தியர்களுக்கு எதிராக நாங்கள் தீட்டிய திட்டத்தை எங்களுடைய பவுலர்கள் சிறப்பாக செயல்படுத்தி காட்டினார்கள். பேட்டிங்கில் நாங்கள் பல தவறுகளை செய்தோம்.

எப்போதுமே ஷேஸ் செய்யும் போது ரன்களை பிரித்துக் கொண்டு விளையாட வேண்டும். ஆனால் அது எங்களுக்கு இன்று சரியாக அமையவில்லை. நடுவரிசையில் நாங்கள் கொத்தாக விக்கெட்டுகளை இழந்தோம். இது நல்ல விஷயம் கிடையாது. வெற்றியைப் பெற்றாலும் குறையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். தோல்வி அருகே சென்றாலும் போராடி நாங்கள் வெற்றி பெற்றோம்.

இந்த குணத்தை தான் தொடர்ந்து நாங்கள் வெளிக்காட்ட விரும்புகின்றோம். எங்கள் அணியில் சில வீரர்கள் ஓய்வுக்கு பின்பு களத்திற்கு திரும்பி இருக்கிறார்கள். அவர்கள் வெறிகொண்டு விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் அணியில் இடம் பிடித்த இளம் வீரர்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டது நல்ல விஷயமாக நான் பார்க்கின்றேன்.

எங்கள் அணியில் பல இளம் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அணியில் உள்ள சீனியர்களுக்கு ஒரு ஊக்கமாக விளங்குகிறார்கள். இந்தப் போட்டியை வெற்றி பெற்று தொடரை சமன் செய்து இருக்கிறோம். அதை நினைத்து மகிழ்ச்சி கொள்கின்றோம். நாங்கள் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கவில்லை. ஒரு நேரத்தில் ஒரு போட்டி என்ற நோக்கத்திலே விளையாடி வருகின்றோம்.

Story first published: Monday, November 11, 2024, 7:01 [IST]
Other articles published on Nov 11, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+