Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: இன்னும் 5 விக்கெட் எடுத்தால் போதும்.. சரித்திரம் படைக்கப் போகும் அர்ஷ்தீப் சிங்

ஜோஹன்னஸ்பெர்க்: தென்னாபிரிக்க அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஐந்து விக்கெட் வீழ்த்தினால் பல்வேறு சாதனைகளை முறியடித்து வரலாறு படைக்க முடியும். அர்ஷ்தீப் சிங் தற்போது இந்தியாவுக்காக சர்வதேச டி20 போட்டிகளில் வெறும் 59 போட்டிகளில் 92 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.

அவர் இன்னும் ஐந்து விக்கெட்கள் வீழ்த்தும் பட்சத்தில் இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராக முதல் இடத்தை பிடிப்பார். யுஸ்வேந்திர சாஹல் இந்திய அணிக்காக 80 டி20 போட்டிகளில் 96 விக்கெட்களை அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.

ind vs sa india arshdeep singh 20


அடுத்து தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நான்காவது டி20 போட்டியில் ஐந்து விக்கெட் வீழ்த்தும் பட்சத்தில் அவர் ஒரே ஆண்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடிப்பார். 2022 ஆம் ஆண்டு புவனேஸ்வர் குமார் 32 போட்டிகளில் 37 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். தற்போது அர்ஷ்தீப் சிங் இந்த ஆண்டு 17 போட்டிகளில் 33 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியே இந்த ஆண்டு இந்திய அணியின் கடைசி டி20 போட்டி ஆகும். இதில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட் வீழ்த்தினால் புவனேஸ்வர் குமாரின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெறுவார். இந்திய அணிக்காக ஒரே ஆண்டில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் முதல் ஐந்து இடங்களில் மூன்று முறை அர்ஷ்தீப் சிங் இடம் பெற்று இருக்கிறார்.

2022 ஆம் ஆண்டு 33 விக்கெட்களையும், 2023 ஆம் ஆண்டு 26 விக்கெட்களையும் வீழ்த்தி இருக்கிறார் அர்ஷ்தீப் சிங். தற்போது 2024 ஆம் ஆண்டு இதுவரை 33 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.

இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் -

1. யுஸ்வேந்திர சாஹல் - 80 போட்டிகள் - 96 விக்கெட்கள்
2. அர்ஷ்தீப் சிங் - 59 போட்டிகள் - 92 விக்கெட்கள்
3. புவனேஷ்வர் குமார் - 87 போட்டிகள் - 90 விக்கெட்கள்
4. ஜஸ்பிரித் பும்ரா - 70 போட்டிகள் - 89 விக்கெட்கள்
5. ஹர்திக் பாண்டியா - 108 போட்டிகள் - 88 விக்கெட்கள்

Story first published: Friday, November 15, 2024, 15:01 [IST]
Other articles published on Nov 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+