For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி, ரோஹித் இல்லை.. இந்தியாவுக்கு அதிக ரன் அடிக்கப் போறது இவர்தான்.. ஏன் தெரியுமா?

Recommended Video

WORLD CUP 2019 IND VS SA | இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு

சௌதாம்ப்டன் : 2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியா தன் முதல் லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை இன்று சந்திக்க உள்ளது.

இந்த முறை உலகக்கோப்பை தொடரில் எந்த வீரர் அதிக ரன் குவிக்கப் போகிறார்? இந்தியா ஆடும் போட்டிகளில் அதிக வெற்றி தேடித் தரப் போவது யார்?

அடுத்த யுவராஜ் சிங்.. தினேஷ் கார்த்திக்கா? நம்ம தோனியை மறந்துட்டீங்களே மெக்கிராத்! அடுத்த யுவராஜ் சிங்.. தினேஷ் கார்த்திக்கா? நம்ம தோனியை மறந்துட்டீங்களே மெக்கிராத்!

தவான்

தவான்

இது போன்ற கேள்விகளுக்கு பலரும் விராட் கோலி, ரோஹித் சர்மா, தோனி அல்லது பந்துவீச்சாளர்களில் பும்ரா உள்ளிட்டோர் பெயர்களை கூறி வருகின்றனர். ஆனால், உண்மையில் ஷிகர் தவான் தான் இந்திய அணிக்கு அதிக ரன்கள் அடித்து, வெற்றிகள் தேடித் தருவார் என்று கூறுகிறது ஒரு புள்ளிவிவரம்.

பார்முக்கு வருவார்

பார்முக்கு வருவார்

ஷிகர் தவான் கடந்த சில ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து ரன் குவிக்கவில்லை. இருந்தாலும் உலகக்கோப்பை தொடரில் தவான் பட்டையைக் கிளப்ப அதிக வாய்ப்புள்ளது. காரணம், தவானுக்கு பல நாடுகள் ஆடும் கிரிக்கெட் தொடர்கள் என்றால் செம பார்முக்கு வந்து விடுவார்.

தவான் செயல்பாடு

தவான் செயல்பாடு

ஷிகர் தவான் பல நாடுகள் ஆடும் கிரிக்கெட் தொடர்களான உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராபி, ஆசிய கோப்பை உள்ளிட்ட தொடர்களில் இதுவரை 27 போட்டிகளில் பங்கேற்று 1647 ரன்கள் குவித்துள்ளார்.

50+ ரன்கள்

50+ ரன்கள்

பல நாடுகள் ஆடும் தொடர்களில் அவரது சராசரி, 63.34 ஆகும். இந்த 27 போட்டிகளில் 7 சதங்களும், 6 அரைசதங்களும் அடித்து அசத்தியுள்ளார் தவான். கிட்டத்தட்ட 2 போட்டிகளுக்கு ஒரு முறை 50+ ஸ்கோர் அடித்துள்ளார்.

அதிக சராசரி

அதிக சராசரி

இது ஒரு பக்கம் என்றால், இங்கிலாந்து மண்ணில், இங்கிலாந்து வீரர்கள் அல்லாதவர்களில் அதிக பேட்டிங் சராசரி வைத்துள்ள பேட்ஸ்மேன் ஷிகர் தவான் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து மண்ணில் 17 இன்னிங்க்ஸ்களில் 976 ரன்கள் குவித்துள்ள தவான், பேட்டிங் சராசரியாக 65.06 வைத்துள்ளார்.

ஒரு சந்தேகம்

ஒரு சந்தேகம்

இதை வைத்துப் பார்த்தால், இங்கிலாந்து மண்ணில் நடக்கும் உலகக்கோப்பை தொடரில் ஷிகர் தவான் பட்டையைக் கிளப்பப் போகிறார் என்று தான் தோன்றுகிறது. ஆனால், ஒரு சந்தேகமும் உள்ளது.

ஸ்விங் தடுமாற்றம்

ஸ்விங் தடுமாற்றம்

உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்தியா ஆடிய இரண்டு பயிற்சிப் போட்டிகளிலும் ஷிகர் தவான் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து இருந்தார். அதற்கு முக்கிய காரணம், இங்கிலாந்து ஆடுகளங்களில் துவக்க ஓவர்களில் ஸ்விங் ஆகும் பந்துகள் தான்.

தடுமாறுவது புதிதல்ல

தடுமாறுவது புதிதல்ல

ஸ்விங் பந்துவீச்சில் தவான் தடுமாறுவது புதிதல்ல. கடந்த வருடம் இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது, தவான் வேகப் பந்துவீச்சில் தொடர்ந்து ரன் குவிக்க முடியாமல் திணறி தன் விக்கெட்டை பறிகொடுத்து வந்தார். அந்த ஒரு பலவீனத்தை மட்டும் தவிர்த்து விட்டால், தவான் இந்திய அணிக்கு அருமையாக துவக்கம் அளித்து, பல வெற்றிகளை பெற்றுக் கொடுப்பார்.

Story first published: Wednesday, June 5, 2019, 10:31 [IST]
Other articles published on Jun 5, 2019
English summary
SA vs IND Cricket World cup 2019 : Shikar Dhawan will be crucial for India in World cup
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X