Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20யில் நாங்க தான் கெத்து.. வரலாறு படைத்த இந்திய அணி.. எந்த அணியும் செய்யாத 200+ ஸ்கோர் ரெக்கார்டு

டர்பன்: சர்வதேச டி20 போட்டிகளில் எந்த நாடும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை இந்திய அணி செய்து இருக்கிறது. ஒரே ஆண்டில் அதிக முறை 200க்கும் அதிகமான ஸ்கோர்களை எடுத்து சாதித்து இருக்கிறது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அதிரடியாக ஆடியது. சஞ்சு சங்சன் 50 பந்துகளில் 107 ரன்கள் எடுத்தார். அதன் மூலம், இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்து இருந்தது.

இந்த ஆண்டு இந்தியா எடுக்கும் ஏழாவது 200க்கும் அதிகமான ஸ்கோர் இதுவாகும். இதன் மூலம் 2023 மற்றும் 2024 என தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இந்திய அணி ஒரே ஆண்டில் அதிக முறை 200க்கும் அதிகமான ஸ்கோர் எடுத்த அணிகளின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறது. பிர்மிங்காம் பியர்ஸ் என்ற இங்கிலாந்து உள்ளூர் அணி 2022 ஆம் ஆண்டு ஏழு முறை 200க்கும் அதிகமான ஸ்கோர்களை எடுத்து இருந்தது.

ind vs sa india south africa

அதேபோல 2024 ஆம் ஆண்டு ஜப்பான் அணி ஏழு முறை 200க்கும் அதிகமான ஸ்கோரை எடுத்து இருக்கிறது. இந்தியா, ஜப்பான் மற்றும் பிர்மிங்காம் பியர்ஸ் ஆகிய மூன்று அணிகளும் ஒரே ஆண்டில் அதிக முறை 200க்கும் அதிகமான ஸ்கோர்களை எடுத்த அணிகளாக உள்ளன. இதில் இந்தியா மட்டுமே இரண்டு முறை முதல் இடத்தில் இடம் பெற்று இருக்கிறது.

அதே சமயம் எந்த டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணியும் ஒரே ஆண்டில் இந்திய அணி அளவுக்கு ஏழு முறை 200க்கும் அதிகமான ஸ்கோர்களை சர்வதேச டி20 போட்டிகளில் எடுக்கவில்லை. தற்போது தென்னாபிரிக்க அணிக்கு எதிராக மேலும் மூன்று டி20 போட்டிகள் மீதம் உள்ள நிலையில், அதில் ஒரு முறை இந்திய அணி 200க்கும் அதிகமான ஸ்கோரை எடுத்தால் ஒரே ஆண்டில் அதிக 200க்கும் அதிகமான ஸ்கோர் எடுத்து அணிகளின் பட்டியலில் முதல் இடத்தை தனியாகவே தக்க வைக்கும்.

மேலும், உள்ளூர் டி20 அணிகள் மற்றும் சர்வதேச டி20 அணிகளை மொத்தமாக கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் அதிக முறை 200க்கும் அதிகமான ஸ்கோர் எடுத்த அணியாக இந்திய அணியே உள்ளது. இந்திய அணி இதுவரை 38 முறை சர்வதேச டி20 போட்டிகளில் 200க்கும் அதிகமான ஸ்கோர்களை எடுத்து இருக்கிறது. ஆஸ்திரேலியா 23 முறையும், தென்னாப்பிரிக்கா 22 முறையும், நியூசிலாந்து 21 முறையும், இங்கிலாந்து 20 முறையும் 200க்கும் அதிகமான ஸ்கோர்களை எடுத்து அடுத்த நான்கு இடங்களில் உள்ளன.

Story first published: Saturday, November 9, 2024, 14:25 [IST]
Other articles published on Nov 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+