செஞ்சூரியன் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
வெற்றிக்கு பிறகு பேசிய இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ் இந்த போட்டியில் முடிவு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. பயமின்றி விளையாடுங்கள் என்பதை தான் நாங்கள் திரும்பத் திரும்ப அணியின் ஆலோசனை கூட்டத்தில் சொல்கின்றோம்.

நாங்கள் எந்த மாதிரி கிரிக்கெட்டை விளையாட நினைத்தமோ அதை இந்த ஆட்டத்தில் செயல்படுத்தினோம். நாங்கள் பயிற்சி செய்யும் போது அதிரடியாக ஆடுவதற்கு முயற்சி செய்கின்றோம். ஐபிஎல் தொடரில் தங்களது அணிக்கு எப்படி விளையாடுகிறார்களோ அதை இந்திய அணிக்காக செய்கிறோம். சில இன்னிங்ஸ்களில் அவர்கள் சரியாக விளையாடவில்லை என்றாலும் தாங்கள் தொடர்ந்து அவர்களுக்கு உறுதுணையாக இருக்கின்றோம்.
வீரர்களும் சில போட்டிகளில் விரைவில் ஆட்டம் இழந்தாலும் அதிரடியாக ஆட வேண்டிய உத்வேகத்தில் இருக்கிறார்கள். ஆக்ரோஷமாகவும் ரன்கள் குவிக்க வேண்டும் என்ற உத்வேகமும் இருந்தால் மட்டுமே டி20 கிரிக்கெட்டில் வெற்றி பெற முடியும். இறங்கி வந்து சிக்ஸர் அடிக்கவில்லை என்றாலும் சிங்கிள் ஆவது எடுப்பது தான் ரன் அடிக்க வேண்டும் என்ற உத்வேகம் என்பதாகும்.
இதை எங்களது அணி வீரர்கள் சிறப்பாக செய்வதால் என்னுடைய பணி குறைகின்றது. முதல் டி20 போட்டி முடிவடைந்த பிறகு திலக் வர்மா என்னிடம் வந்து நான் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்யவா என்று கேட்டார். இதனால் இன்று போய் விளையாடு என்று அனுப்பி வைத்தேன்.
அவர் என்று தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டது நினைத்து நான் மகிழ்ச்சி கொள்கின்றேன். வாய்ப்பு வேண்டும் என்று கேட்டு அதை சரியாக பயன்படுத்தியிருக்கிறார். அவருடைய குடும்பத்தினருக்காகவும் நான் மகிழ்ச்சி கொள்கின்றேன் என்று சூரிய குமார் தெரிவித்துள்ளார்.