Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தென் ஆப்பிரிக்காவையே வீழ்த்திக் காட்டிய நமீபியா.. மானத்தை காப்பாற்றிய டெவால்ட் பிரெவிஸ்!

விண்டோக்: முத்தரப்பு டி20 தொடரின் முதல் போட்டியில், பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்க அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நமீபியா வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது.

நமீபியா அணியின் தொடக்க வீரர் லாரன் ஸ்டீன்காம்ப் 41 ரன்களும், ஜான் பிரைலிங்க் 38 பந்துகளில் 60 ரன்களும் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் சுப்ராயன் 3 விக்கெட்டுகளையும், பார்ச்சுன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்பின் 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.

SA vs NAM Namibia Records Historic T20I Victory Over South Africa Despite Dewald Brevis Knock

ஜோர்டான் ஹெர்மன், பிரிட்டோரியஸ் மற்றும் டோனி டி சோர்சி ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறியதால், 39 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தடுமாறியது. ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் டெவால்ட் பிரெவிஸ் அதிரடியாக விளையாடி 50 பந்துகளில் 75 ரன்கள் குவித்து நம்பிக்கை அளித்தார்.

ஆனால், தென் ஆப்பிரிக்கா 133 ரன்கள் எடுத்திருந்த போது பிரெவிஸ் ஆட்டமிழந்தார். இது ஆட்டத்தின் முக்கிய திருப்பமாக அமைந்தது. அதன் பின்னர் தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல சரிந்தன. பார்ச்சுன், மொகோய்னா, சுப்ராயன் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

கடைசி வரை போராடிய துவான் ஜான்சென் 25 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. நமீபியா தரப்பில் ஜேஜே ஸ்மித் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பிரெவிஸ் இல்லையென்றால் இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 100 ரன்களை கூட எட்டி இருக்காது.

இம்ரான் கான் மகன்களின் பேட்டியால் சர்ச்சை.. இங்கிலாந்து டெஸ்ட்டை பாதியில் நிறுத்த முயன்ற பாகிஸ்தான்

இம்ரான் கான் மகன்களின் பேட்டியால் சர்ச்சை.. இங்கிலாந்து டெஸ்ட்டை பாதியில் நிறுத்த முயன்ற பாகிஸ்தான்

இந்த வரலாற்று வெற்றி குறித்துப் பேசிய நமீபியா கேப்டன் கெர்ஹார்ட் எராஸ்மஸ், "நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதையும், உலகின் சிறந்த அணிகளுக்கு சவால் அளிக்கக்கூடிய திறமை எங்களிடம் உள்ளது என்பதையும் இந்த வெற்றி மீண்டும் நிரூபித்துள்ளது" என்றார். இந்த முத்தரப்பு தொடரில் தென்னாப்பிரிக்க அணி அடுத்து ஜிம்பாப்வேவுடன் விளையாட உள்ளது.

Story first published: Saturday, August 29, 2026, 9:11 [IST]
Other articles published on Aug 29, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+