Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ் டிராபி பைனலுக்கு முன்னேறிய நியூசிலாந்து.. 67 பந்துகளில் சதம் அடித்த மில்லர்.. SA தோல்வி

லாகூர்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அரையிறுதி சுற்றி தென்னாப்பிரிக்க அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. லாகூரில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதை அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் வில் யங் 21 ரன்களில் ஆட்டம் இழக்க, தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா அதிரடியாக விளையாடி 108 ரன்கள் குவித்தார். இதேபோன்று நியூசிலாந்து அணியின் அனுபவ வீரர் கேன் வில்லியம்சன் 102 ரன்களை குவிக்க டாரல் மிட்செல் மற்றும் கிளன் பிலிப்ஸ் ஆகியோர் தலா 49 ரன்கள் அடித்தனர்.

Champions Trophy 2025 NZ vs SA david miller

இதன் மூலம் நியூசிலாந்து அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 362 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. இதனை அடுத்து 363 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க வீரர்கள் களமிறங்கினர். கேப்டன் பெவுமா 56 ரன்களிலும், தொடக்க வீரர் ரிக்கல்டன் 17 ரன்களிலும் ஆட்டம் இழக்க வேண்டர் டூஷன் 69 ரன்கள் எடுத்தார்.

அதே போன்று ஏய்டன் மார்க்கரம் 31 ரன்களும், கிளாசன் 3 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 125 ரன்களில் ஒரு விக்கெட் என்ற நிலையில் இருந்த போது முக்கிய கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் அவ்வளவு பெரிய இலக்கை எட்ட முடியாமல் போனது. எனினும் நடுவரிசையில் களம் இறங்கி டேவிட் மில்லர் மட்டும் அதிரடியாக விளையாடி தனி ஆளாக போராடினார்.

ஆனால் இலக்கு மிகவும் அதிகம் என்பதால் அவரால் அணியை வெற்றிக்கு கொண்டு செல்ல முடியவில்லை. எனினும் கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுத்தால் டேவிட் மில்லர் சதத்தை தொட முடியும் என நிலை இருந்தது. இதை அடுத்து போராடிய டேவிட் மில்லர் இரண்டு பவுண்டரி ,ஒரு சிக்ஸர், இரண்டு டபுள்ஸ் ஓடி சதத்தை 67 பந்துகளில் பூர்த்தி செய்தார்.

இதன் மூலம் தென்னாபிரிக்கா அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் எடுத்தது. 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது. இறுதிப் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு எதிராக துபாயில் நடைபெற உள்ளது.

Story first published: Wednesday, March 5, 2025, 22:43 [IST]
Other articles published on Mar 5, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+