For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ODI வரலாற்றிலேயே அதிவேக மைல்கல் சாதனை.. 9 ஆண்டு விராட் கோலி ரெக்கார்டை உடைத்த கேன் வில்லியம்சன்

லாகூர்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர் கேன் வில்லியம்சன் 113 பந்துகளில் 133 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். இதன் மூலம், விராட் கோலியின் 9 ஆண்டு ஒருநாள் போட்டி சாதனை ஒன்றை முறியடித்து இருக்கிறார்.

இந்தப் போட்டியில் கேன் வில்லியம்சன் தனது 14வது ஒருநாள் போட்டி சதத்தை அடித்து இருந்தார். மேலும், சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் போட்டியில் அவர் சதம் அடித்துள்ளார். இந்தப் போட்டியில் அவர் 133 ரன்கள் சேர்த்த நிலையில் அவரது ஒருநாள் போட்டி ஸ்கோர் 7000 என்ற மைல்கல்லை எட்டியது.

SA vs NZ New Zealand South Africa

167 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7001 ரன்களை எடுத்து இருக்கிறார் கேன் வில்லியம்சன். இந்த 7000 ஒருநாள் போட்டி ரன்களை அதிவேகமாக எடுத்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை முந்தி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

151 இன்னிங்ஸ்களில் 7000 ரன்களை எட்டிய ஹஷிம் அம்லா இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் நிலையில், கேன் வில்லியம்சன் 159 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். விராட் கோலி 161 இன்னிங்ஸ்களில் 7000 ஒருநாள் போட்டி ரன்களை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சாதனையை இரண்டு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் கேன் வில்லியம்சன் முறியடித்தார்.

இந்தப் பட்டியலில் ஏபி டி வில்லியர்ஸ் 166 இன்னிங்ஸ்கள், சௌரவ் கங்குலி 174 இன்னிங்ஸ்கள், ரோஹித் சர்மா 181 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டி அடுத்த மூன்று இடங்களில் உள்ளனர். மேலும், இந்தப் போட்டியில் 72 பந்துகளிலேயே கேன் வில்லியம்சன் சதத்தை எட்டி இருந்தார். இது அவரது இரண்டாவது அதிவேக ஒருநாள் போட்டி சதமாக அமைந்தது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 334 ரன்கள் சேர்த்த நிலையில், நியூசிலாந்து அணி 48.4 ஓவர்களில் அந்த இலக்கை எட்டியது. கேன் வில்லியம்சன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தார்.

Story first published: Monday, February 10, 2025, 19:51 [IST]
Other articles published on Feb 10, 2025
English summary
SA vs NZ: Kane Williamson breaks Virat Kohli fastest 7000 ODI runs record
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+