Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தென்னாப்பிரிக்கா சோலியை முடித்த கேன் மாமா.. தெறிக்க விட்ட நியூசிலாந்து.. ட்ரை சீரிஸில் 2 வது வெற்றி

லாகூர்: பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 48.4 ஓவர்களில் இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

"கேன் மாமா" என அழைக்கப்படும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரசிகர்களால் அழைக்கப்படும் கேன் வில்லியம்சன் இந்தப் போட்டியில் அதிரடி சதம் அடித்து தென்னாப்பிரிக்காவை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தார்.

SA vs NZ New Zealand South Africa

இதற்கு முன் இந்த முத்தரப்பு தொடரில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியிருந்தன. அந்தப் போட்டியிலும் நியூசிலாந்து அணியே வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வென்று தனது இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது.

லாகூரில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணியின் துவக்க வீரர் மேத்யூ ப்ரீட்ஸ்கே தனது அறிமுகப் போட்டியிலேயே 150 ரன்கள் சேர்த்து அபாரமாக ரன் குவித்தார். 11 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களை விளாசினார். வியான் முல்டர் 60 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்தார். நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் மேட் ஹென்றி இரண்டு விக்கெட்களும், வில்லியம் ஓ'ரூர்க் இரண்டு விக்கெட்களும், மைக்கேல் பிரேஸ்வெல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தியிருந்தனர்.

அடுத்து நியூசிலாந்து அணி சேசிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் வில் யங் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜோடி சேர்ந்த டெவான் கான்வே மற்றும் கேன் வில்லியம்சன் இரண்டாவது விக்கெட்டுக்கு 187 ரன்கள் சேர்த்தனர். டெவான் கான்வே 97 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மூன்று ரன்களில் தனது சதத்தை தவறவிட்டார்.

கேன் வில்லியம்சன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 113 பந்துகளில் 133 ரன்கள் சேர்த்தார். 13 ஃபோர் மற்றும் 2 சிக்ஸர்களை அடித்திருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 117 ஆக இருந்தது. அதன் பின் சில விக்கெட்டுகள் விழுந்த போதும் கேன் வில்லியம்சன் அதிரடியாக விளையாடி தனது அணியை வெற்றி பெற வைத்தார்.

நியூசிலாந்து அணி 48.4 ஓவர்களில் 338 ரன்கள் எடுத்தது. 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த முத்தரப்பு தொடரின் புள்ளிப் பட்டியலில் நியூசிலாந்து அணி முதல் இடத்தில் உள்ளது.

முத்தரப்பு தொடரின் புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி 4 புள்ளிகள் பெற்று, 0.906 நெட் ரன் ரேட்டுடன் முதலிடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா ஒரு போட்டியிலும், பாகிஸ்தான் அணி ஒரு போட்டியிலும் மட்டுமே விளையாடி அவற்றில் தோல்வி அடைந்து இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன. பாகிஸ்தான் அணியின் நெட் ரன் ரேட் -1.56 என்பதாக மோசமான நிலையில் உள்ளது.

Story first published: Monday, February 10, 2025, 19:11 [IST]
Other articles published on Feb 10, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+