Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

23 வருட வீரேந்தர் சேவாக்கின் சாம்பியன்ஸ் டிராபி ரெக்கார்டை முறியடித்த தென்னாப்பிரிக்க அதிரடி மன்னன்

லாகூர்: 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்கா தோல்வியடைந்தது. இந்த போட்டியில் கடைசி வரை வெற்றிக்காக முயற்சி செய்த டேவிட் மில்லர் சதம் அடித்தார். ஆனாலும், அவரது சதம் வீணானது. அதே சமயம், அந்த சதத்தின் மூலம் வீரேந்தர் ஷேவாக்கின் 23 ஆண்டுகால சாதனையை முறியடித்து இருக்கிறார் டேவிட் மில்லர்.

இந்த போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 362 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேன் வில்லியம்சன் மற்றும் ரச்சின் ரவீந்திரா சதம் அடித்தனர். தென்னாப்பிரிக்கா 363 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடியது. இடையே, அந்த அணியும் மிக நிதானமாக பேட்டிங் செய்ததால், வெற்றிக்கான ரன் ரேட் விகிதம் அதிகமாகிக் கொண்டே சென்றது.

SA vs NZ Champions Trophy 2025 South Africa 2025

இதனை அடுத்து டேவிட் மில்லர் அதிரடியாக ஆடினார். அவர் 67 பந்துகளில் சதம் அடித்தார். சரியாக கடைசி பந்தில் தனது சதத்தை நிறைவு செய்தார். தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட்டுகளை இழந்த போது, டேவிட் மில்லர் 42 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து இருந்தார். ஆனால், அடுத்த 25 பந்துகளில் அவர் 54 ரன்களை சேர்த்தார். எனினும், தென்னாப்பிரிக்கா 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

2002 ஆம் ஆண்டு வீரேந்தர் சேவாக் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 77 பந்துகளில் சதம் அடித்திருந்தார். அதுவே சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிவேக சதமாக உள்ளது. அந்த சாதனையை நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் இங்கிலிஸ் சமன் செய்திருந்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஜோஸ் இங்கிலிஸ் 77 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.

தற்போது இந்த இரண்டு சாதனைகளையும் டேவிட் மில்லர் முறியடித்து இருக்கிறார். மேலும், 70 பந்துகளுக்கும் குறைவான பந்துகளில் சாம்பியன்ஸ் டிராபியில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் டேவிட் மில்லர் பெற்று இருக்கிறார். அவர் ஒவ்வொரு முறையும் ஐசிசி நாக்கவுட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

2013 சாம்பியன்ஸ் டிராபி அரை இறுதியில் 51 பந்துகளில் 56 ரன்கள் எடுத்திருக்கிறார். 2015 உலகக்கோப்பை அரை இறுதியில் 18 பந்துகளில் 49 ரன்கள் எடுத்திருந்தார். 2023 உலக கோப்பை அரையிறுதியில் 101 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது 2025 சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் 67 பந்துகளில் 100 ரன்கள் எடுத்திருக்கிறார்.

Story first published: Thursday, March 6, 2025, 11:14 [IST]
Other articles published on Mar 6, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+