Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SA vs NZ: 19 பந்துகளில் மார்க்கரம் அரைசதம்.. ரோகித் சாதனை சமன்.. நியூசி.யை எளிதில் வென்ற தென்னாப்பிரிக்கா

அகமதாபாத்: டி20 உலககோப்பை 2026 தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், தென் ஆப்பிரிக்கா கேப்டன் எய்டன் மார்க்ரம் 44 பந்துகளில் 86 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

நியூசிலாந்து நிர்ணயித்த 176 ரன்கள் என்ற வெற்றி இலக்கை, தென் ஆப்பிரிக்கா அணி 17.1 ஓவர்களிலேயே எட்டி, வலுவான வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா, டி பிரிவு புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து, சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறுவதை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. மார்க்ரம் தனது அதிரடி ஆட்டத்தால் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

19 பந்துகளில் அரைசதம் விளாசிய மார்க்கரம், டி20 உலககோப்பையில் அதிவேக அரைசதம் விளாசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சாதனையை சமன் செய்தார். தென் ஆப்பிரிக்கா அணி வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த சூழலில், போட்டியின் நடுப்பகுதியில் 'டிரிங்க்ஸ் பிரேக்’ எடுக்கப்பட்டது. அப்போது, தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 36 பந்துகளில் 34 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் ஓரளவு கட்டுக்கோப்புடன் பந்துவீசினாலும், அனைத்து விக்கெட்களையும் வீழ்த்தினால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்ற சூழல் இருந்தது.

இந்த நெருக்கடியான நிலையில், லோக்கி பெர்குசன் வீசிய பந்தில், மார்க்ரம் கொடுத்த கேட்சை பெர்குசனே தவறவிட்டது நியூசிலாந்துக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இந்த வாய்ப்பை மார்க்ரம் நன்கு பயன்படுத்திக் கொண்டு தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டார்.

ரச்சின் ரவீந்திரா டெவால்ட் ப்ரெவிஸின் விக்கெட்டை வீழ்த்தி நியூசிலாந்திற்கு ஒரு சிறிய ஆறுதலை அளித்தாலும், களம் இறங்கிய டேவிட் மில்லர், மார்க்ரமுடன் இணைந்து எஞ்சிய ரன்களை எளிதாக எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இது வெற்றியை விரைவுபடுத்த உதவியது. முன்னதாக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் டாப் வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

64 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், நடுவரிசையில் மார்க் சாப்மன் 26 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்தார். இதில் 6 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். இதே போன்று டேரல் மிட்செல் 24 பந்துகளில் 32 ரன்கள் எடுக்க, நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்து. டாப் ஆர்டர் வீரர்கள் கொஞ்சம் பெரிய ஸ்கோர் அடித்திருந்தால், 200 ரன்களுக்கு மேல் நியூசிலாடநது அணி குவித்திருக்கும்.

Story first published: Saturday, February 14, 2026, 22:41 [IST]
Other articles published on Feb 14, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+