Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின், கோலி ரெக்கார்டை நெருங்கிய பாகிஸ்தான் கேப்டன்.. தென்னாப்பிரிக்க அணியை கதற விட்ட ஷான் மசூத்

கேப் டவுன்: பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் தென்னாப்பிரிக்கா மண்ணில் மாபெரும் சாதனையை செய்து இருக்கிறார். தென்னாப்பிரிக்கா மண்ணில் அதிக ஸ்கோர் அடித்த பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை அவர் செய்து இருக்கிறார். மேலும், தென்னாப்பிரிக்கா மண்ணில் அதிக ஸ்கோரை எடுத்த ஆசிய கேப்டன்கள் வரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்து இருக்கிறார்.

இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் சச்சின் டெண்டுல்கரும், இரண்டாவது இடத்தில் விராட் கோலியும் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவர்களை நெருங்கிய போதும் ஷான் மசூத்-ஆல் அவர்களின் ஸ்கோரை தொட முடியவில்லை.

sa vs pak pakistan south africa


தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்து இருந்தது. இந்த நிலையில் இரண்டாவது போட்டி கேப் டவுனில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 615 ரன்கள் குவித்து பாகிஸ்தான் அணிக்கு சவால் விட்டது. பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 194 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதை அடுத்து ஃபாலோ ஆன் பெற்ற பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக ரன் சேர்த்தது.

முதல் விக்கெட்டுக்கு கேப்டன் ஷான் மசூத் மற்றும் பாபர் அசாம் இணைந்து 205 ரன்கள் சேர்த்தனர். பாபர் அசாம் 81 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதன் பின் வந்த வீரர்கள் யாரும் அரை சதம் அடிக்காத போதும் ஓரளவு ரன் சேர்த்தனர். மறுபுறம் ஷான் மசூத் சதம் அடித்தார். அவர் 251 பந்துகளை சந்தித்து 145 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதை அடுத்து பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 478 ரன்கள் சேர்த்தது. தென்னாப்பிரிக்கா அணிக்கு 58 ரன்கள் என்ற சிறிய இலக்கை நிர்ணயித்தது. அதை தென்னாப்பிரிக்கா 10 விக்கெட் வித்தியாசத்தில் எட்டி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் இரண்டு முக்கிய சாதனைகளை செய்து இருக்கிறார்.

தென்னாப்பிரிக்கா மண்ணில் அதிக ஸ்கோரை அடித்த பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை செய்து இருக்கிறார். அடுத்து தென்னாப்பிரிக்கா மண்ணில் அதிக ஸ்கோர் அடித்த ஆசிய கேப்டன்கள் வரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்து இருக்கிறார்.


தென்னாப்பிரிக்கா மண்ணில் அதிக ஸ்கோரை அடித்த பாகிஸ்தான் வீரர்கள் பட்டியல் -

1 - ஷான் மசூத் - 2025 - 145 ரன்கள்

2 - அசார் மஹ்மூத் - 1998 - 136 ரன்கள்

3 - தௌஃபீக் உமர் - 2003 - 135 ரன்கள்

4 - சயீத் அன்வர் - 1998 - 118 ரன்கள்

5 - ஆசாத் ஷபிக் - 2013 - 111 ரன்கள்

தென்னாப்பிரிக்கா மண்ணில் அதிக ஸ்கோரை அடித்த ஆசிய கேப்டன்கள் பட்டியல் -

1 - சச்சின் டெண்டுல்கர்: 1997 - 169 ரன்கள்

2 - விராட் கோலி : 2018 - 153 ரன்கள்

3 - ஷான் மசூத்: 2025 - 145 ரன்கள்

4 - டிமுத் கருணாரத்ன: 2021 - 103 ரன்கள்

5 - சலீம் மாலிக்: 1995 - 99 ரன்கள்

Story first published: Tuesday, January 7, 2025, 9:25 [IST]
Other articles published on Jan 7, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+