Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வின் ரெக்கார்டு காலி.. வரலாறு படைத்த இலங்கை பவுலர்.. தென்னாப்பிரிக்க பவுலர் WTC-இல் சாதனை

டர்பன்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இலங்கை அணி 42 ரன்களில் ஆல் - அவுட் ஆகி மோசமான சாதனையை பதிவு செய்து இருக்கும் அதே வேளையில் இந்த இரண்டு அணிகளை சேர்ந்த பந்துவீச்சாளர்கள் வரலாற்று சாதனையை படைத்துள்ளனர். பிரபாத் ஜெயசூர்யா மற்றும் மார்கோ ஜான்சன் முக்கிய பந்துவீச்சு சாதனைகளை செய்து உள்ளனர்.

இலங்கை அணியின் சுழற் பந்துவீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா அஸ்வினின் டெஸ்ட் ரெக்கார்டு ஒன்றை முறியடித்து இருக்கிறார். அவர் நேற்று நடந்த தென்னாப்பிரிக்கா - இலங்கை முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்தி மைல்கல் சாதனை படைத்தார்.

SA vs SL Marco Jansen Prabath Jayasuriya

அவர் 17 போட்டிகளில் 100 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தி உலக அளவில் சாதனை படைத்து இருக்கிறார். குறைந்த போட்டிகளில் 100 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் அவர் இரண்டாவது இடத்தை பிடித்து உள்ளார். இரண்டாவது இடத்தை நான்கு பந்துவீச்சாளர்களுடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.

மேலும், ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதனையை முறியடித்து இருக்கிறார். ரவிச்சந்திரன் அஸ்வின் 18 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அவரது சாதனையை முறியடித்து இருக்கும் பிரபாத் ஜெயசூர்யா தற்போது 17 போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். பாகிஸ்தானின் யாசிர் ஷா, ஆஸ்திரேலியாவின் சார்லி டர்னர், இங்கிலாந்தின் சிட்னி பார்னஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் கிளாரி கிரிம்மெட் ஆகியோரும் 17 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்தி இரண்டாவது இடத்தை பிடித்து உள்ளனர்.

இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது இங்கிலாந்தின் ஜார்ஜ் ஆல்ஃபிரட் லோமன் ஆவார். அவர் 1886 ஆம் ஆண்டு 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நிலையில் 100 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அந்த சாதனையை இதுவரை எந்த ஒரு பந்துவீச்சாளரும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் இலங்கை அணி 42 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆக முக்கிய காரணமாக இருந்த தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் மார்க்கோ ஜான்சன் 6.5 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 7 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் இதுவே வேகப் பந்துவீச்சாளர்கள் இடையே மிகச்சிறந்த பந்து வீச்சாகும். முன்னதாக நியூசிலாந்தின் மாட் ஹென்றி 23 ரன்கள் விட்டுக் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்துவீச்சாக இருந்தது. அந்த சாதனையை மார்க்கோ ஜான்சன் முறியடித்து இருக்கிறார்.

Story first published: Friday, November 29, 2024, 9:13 [IST]
Other articles published on Nov 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+