Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தென்னாப்பிரிக்கா 240 அடித்திருக்கும்..தடுத்து நிறுத்திய 2 இந்திய பவுலர்! IPL டீம் நோட் பண்ணிக்குங்க

ஆண்டிகுவா : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் அமெரிக்க அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்கா தன்னுடைய அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறது. அமெரிக்க ஆடுகளங்களில் 120 ரன்கள் எடுக்கவே கஷ்டப்பட்ட டாப் அணிகள் தற்போது வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்களில் அதிரடி காட்டி வருகின்றனர்.

டாஸ் வென்ற அமெரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் குயின்டன் டி காக் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார்.

t20 world cup cricket 20 2024

மற்றொரு தொடக்க வீரரான ரிசா ஹென்றிக்ஸ் 11 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய வீரர் நெட்ராவல்காரின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆட்டமிழந்தார். இதை அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு கேப்டன் ஏய்டன் மார்க்கரம், டிகாக் ஜோடி அதிரடி காட்டி ரன்களை சேர்த்தது. இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்தது.

கேப்டன் ஏய்டன் மார்க்கரம் 32 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த நிலையில் நெட்ராவல்கரின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். சிறப்பாக விளையாடிய குயின் டிகாக் 7 பவுண்டரி, 5 சிக்சர் என 40 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். தென்னாபிரிக்க அணி 240 ரன்களை தாண்டி விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய வீரர்களான நெட்ராவல்கர் மற்றும் ஹர்மிட் சிங் தென்னாப்பிரிக்காவின் ரன் குவிக்கும் வேகத்தை குறைத்தனர்.

13 வது ஓவரில் இந்திய வீரர் ஹர்மிட் சிங் தொடர்ந்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இறுதியில் கிளாசென் 36 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டாப்ஸ் 20 ரன்களும் எடுக்க தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்ததும் தென்னாப்பிரிக்க அணி 240 ரன்கள் தாண்டி இருக்கும்.

ஆனால் இந்திய வீரர்கள் சௌரப் நெட்ராவல்கர் மற்றும் ஹர்மிட் சிங் ஆகியோர் அபாரமாக பந்து வீசி தென்ஆப்பிரிக்காவுக்கு நெருக்கடி கொடுத்தனர். 4 ஓவர் வீசி 21 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை நெட்ராவல்கர் எடுத்தார். ஹர்மிரீட் சிங் 4 ஓவரில் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் இந்த இந்திய வீரர்களை ஐபிஎல் தொடரில் அணிகள் தேர்வு செய்ய வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Story first published: Wednesday, June 19, 2024, 21:57 [IST]
Other articles published on Jun 19, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+