Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SA vs WI: மனுசனா நீங்கெல்லாம்.. 13 சிக்ஸ்.. கதிகலங்கிப் போன தென்னாப்பிரிக்கா.. வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

டரூபா: தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடி ஆட்டம் ஆடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்து 174 ரன்கள் எடுத்த நிலையிலும், வெஸ்ட் இண்டீஸ் அணி வெரும் 17.5 ஓவர்களில் அந்த இலக்கை எட்டி அதிரடியாக வென்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 42 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்தார். பின்வரிசை வீரர் பேட்ரிக் க்ரூகர் 32 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் 15 ரன்களை கூட தாண்டவில்லை. 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் சேர்த்தது தென்னாப்பிரிக்கா.

SA vs WI South africa

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சாளர்களில் அகில் ஹுசைன் 4 ஓவர்களில் 22 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். மேத்யூ ஃபோர்டே 4 ஓவர்களில் 27 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களும், ஷமர் ஜோசப் 4 ஓவர்களில் 40 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்களும், ரொமாரியோ ஷெப்பர்ட் 3 ஓவர்களில் 39 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டும் வீழ்த்தி இருந்தனர்.

அடுத்து 175 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் சேஸிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் ஆலிக் அதான்சே மற்றும் ஷாய் ஹோப் முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்தனர். அவர்கள் இருவரும் அதிரடியாக ஆடினர். ஆலிக் அதான்சே 30 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். அவர் 2 ஃபோர் மற்றும் 3 சிக்ஸ் அடித்தார். ஷாய் ஹோப் 36 பந்துகளில் 51 ரன்கள் எடுத்திருந்தார். அவரும் 2 ஃபோர் மற்றும் 3 சிக்ஸ் அடித்து இருந்தார்.

மூன்றாம் வரிசையில் இறங்கிய அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் 26 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சிதறடித்தார். அவர் 2 ஃபோர் மற்றும் 7 சிக்ஸ் அடித்து இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பூரன் அதிரடியால் 17.5 ஓவர்களில் எல்லாம் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி இலக்கை எட்டியது.

இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி மொத்தமே ஆறு சிக்ஸ் அடித்திருந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி 13 சிக்ஸ் அடித்திருந்தது. அதிலும் நிக்கோலஸ் பூரன் தனி ஆளாக தென்னாப்பிரிக்கா அணி அடித்த சிக்ஸ் எண்ணிக்கையை கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது. முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது.

Story first published: Saturday, August 24, 2024, 8:36 [IST]
Other articles published on Aug 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+