உலக டெஸ்ட் சாம்பியன்னா சும்மாவா? 55-4 to 418 ரன்கள்.. தென்னாப்பிரிக்கா அபாரம்.. 19 வயது வீரர் சதம்
ஹராரே: உலக டெஸ்ட் சாம்பியன் ஆன தென்னாப்பிரிக்க அணி இன்று 55 ரன்கள் விக்கெட்டுகளை இழந்த நிலையில், அதன்பின் ஒரே நாளில் 418 ரன்கள் ஜிம்பாப்வேக்கு எதிராக குவித்து அசத்தியிருக்கிறது. கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு லண்டனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி புதிய சாம்பியன் பட்டத்தை தென்னாப்பிரிக்கா அணி கைப்பற்றியது.
இந்த சூழலில் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிக்ஸ் சைக்கிலில் தொடங்கியிருக்கிறது. எனினும் இந்த ஜிம்பாப்வே தொடர் அந்த சைக்கிலில் இடம் பெறாது. இதன் காரணமாக இறுதிப் போட்டியில் விளையாடிய பல வீரர்கள் இந்த ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. கேப்டன் பவுமாவுக்கு காயம் ஏற்பட்டதால் அவரும் இந்தத் தொடரில் விளையாடவில்லை.

இந்த சூழலில் இந்தியா வம்சாவளியை சேர்ந்த கேசவ் மகாராஜா தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டனாக பொறுப்பேற்று இருக்கிறார். பைனலில் விளையாடிய ஏழு வீரர்கள் இந்த ஆட்டத்தில் இடம்பெறவில்லை. இதன் காரணமாக தென்னாப்பிரிக்க அணியில் மூன்று வீரர்கள் அறிமுகமானார்கள்.
அதில் சிஎஸ்கே வீரரான பிரவீஸ் அடங்கும். 11 ஆண்டுகளுக்கு பிறகு இரு அணிகளும் ஜிம்பாப்வேவில் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. ஹாரரேவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதை அடுத்து களமிறங்கிய தென்னாபிரிக்க அணியில் முன்வரிசை வீரர்கள் டோனி டிஸோர்சி, மேத்யூ, வியான் முல்டர்,டேவிட் பெட்டிங்காம் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
இதன் காரணமாக தென்னாபிரிக்க அணி 55 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த சூழலில் 19 வயது வீரரான லூஹான் ட்ரீ பிரிட்டோரியஸ் தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அவருக்கு மற்றொரு அறிமுக வீரரான சிஎஸ்கேவின் பிரவீஸ் நல்ல கம்பெனி கொடுத்தார். இருவரும் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
இதில் டிவால்ட் பிரவீஸ் நான்கு சிக்ஸர் 3 பவுண்டரி என 41 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். எனினும் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய லுஹன் பிரிட்டோரியஸ் சதம் அடித்தார். இதன் மூலம் தென்னாபிரிக்க வரலாற்றில் சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது.
தொடர்ந்து அதிரடி காட்டிய பிரிட்டோரியஸ் 160 பந்துகளில் 153 ரன்கள் சேர்த்தார். இதில் நான்கு சிக்சர், 11 பவுண்டரிகள் அடங்கும். மறுமுனையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய கார்பின் போஷ் 124 பந்துகளில் 100 ரன்கள் அடித்தார். இதன் காரணமாக தென்னாபிரிக்க அணி 90 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 418 ரன்கள் எடுத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications