Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே தம்பி ஜேஎஸ்கே-க்கு முதல் வெற்றி.. 18 பந்தில் அரைசதம் அரைசதம்.. ருத்ரதாண்டவம் ஆடிய இளம் வீரர்

ஜொகன்னஸ்பர்க் : எஸ்ஏ20 தொடரில் ப்ரிட்டோரியா கேபிட்டல்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சிஎஸ்கே அணியின் தம்பியான ஜேஎஸ்கே முதல் வெற்றியை பெற்றுள்ளது.

எஸ்ஏ20 லீக் தொடரின் 13வது லீக் போட்டியில் ஜேஎஸ்கே அணியை எதிர்த்து ப்ரிடோரியா கேப்பிடல்ஸ் அணி களமிறங்கியது. இதுவரை 4 போட்டிகளில் விளையாடிய ஜேஎஸ்கே அணி 3 தோல்வி, ஒரு போட்டி ரத்து என்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. இதனால் சிஎஸ்கே அணி ரசிகர்களும் சோகத்தில் இருந்தனர். இந்த நிலையில் டாஸ் வென்ற ப்ரிட்டோரியா கேபிட்டல்ஸ் அணி கேப்டன் பார்னல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

SA20 2024 : CSK brotherhood team JSK registter their first Victory against Pretoria Capitals by 6 wickets in the SA20 2024

இதையடுத்து களமிறங்கிய ப்ரிடோரியா கேபிட்டல்ஸ் அணிக்கு சால்ட் - வில் ஜாக்ஸ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் வில் ஜாக்ஸ் 1 ரன்னில் ஆட்டமிழக்க, தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான சால்ட் 12 ரன்களிலும், ரூஸோவ் மற்றும் இங்ரம் டக் அவுட்டாகியும் வெளியேறினர். இதனால் அந்த அணி 38 ரன்காளுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இருப்பினும் ஒருமுறையில் நின்று பொறுப்புடன் ஆடிய வெரைன் அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவருக்கு உறுதுணையாக கேப்டன் பார்னல் சிறுது நேரம் கம்பெனி கொடுக்க, ப்ரிடோரியா கேபிட்டல்ஸ் அணியின் ஸ்கோரை 150 ரன்களை கடந்தது. இறுதியாக 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் சேர்த்தது. கடைசி வரை களத்தில் இருந்த வெரைன் ஒரு சிக்ஸ், 7 ஃபோர்ஸ் உட்பட 72 ரன்களை சேர்த்தார்.

ஜேஎஸ்கே அணி தரப்பில் வில்லியம்ஸ் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். இதன்பின் களமிறங்கிய ஜேஎஸ்கே அணிக்கு தொடக்கமே சோகமாக அமைந்தது. மீண்டும் கேப்டன் டூ பிளஸில் 9 ரன்களிலும், ஹென்ரிக்ஸ் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் 16 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து ஜேஎஸ்கே அணி திணறியது. இதன்பின் ப்ளாய் - மக்கான்யா கூட்டணி இணைந்து ஜேஎஸ்கே அணியை மீட்டது.

பின்னர் மக்கான்யா 40 ரன்களிலும், ப்ளாய் 33 ரன்களிலும் ஆட்டமிழக்க, மொயின் அலி - டோனோவன் ஃபெரைரா கூட்டணி அதிரடியாக ரன்களை குவித்தது. அதிலும் டோனோவன் ஃபெரைரா 18 பந்துகளில் அரைசதம் அடித்து ஜேஎஸ்கே அணியை வெற்றிபெற வைத்தார். இதன் மூலமாக ஜேஎஸ்கே அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய ஃபெரைரா 20 பந்துகளில் 3 சிக்ஸ், 7 ஃபோர்ஸ் உட்பட 56 ரன்கள் விளாசினார். இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு ஜேஎஸ்கே அணி முன்னேறியுள்ளது.

Story first published: Sunday, January 21, 2024, 8:39 [IST]
Other articles published on Jan 21, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+