For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியின் சாதனை காலி.. 18 ஆண்டு காத்திருந்து சம்பவம் செய்த தினேஷ் கார்த்திக்.. செம ட்விஸ்ட்

பார்ல்: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனியின் 18 ஆண்டு சாதனையை தினேஷ் கார்த்திக் முறியடித்து இருக்கிறார். டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையை தோனி கடந்த 18 ஆண்டுகளாக தக்கவைத்து இருந்தார். 2007 முதல் 2024 வரை டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்தார் தோனி.

அவரது சாதனையை தற்போது தென்னாப்பிரிக்காவின் உள்நாட்டு டி20 லீக் தொடரில் விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் முறியடித்து இருக்கிறார். அவர் நேற்று நடந்த போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக 15 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார், அவரது ஆட்டத்தால் பார்ல் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.

SA20 2025 Dinesh Karthik surpass Dhoni s 18 year old T20 most runs record

இந்த 21 ரன்கள் மூலம் தினேஷ் கார்த்திக் டி20 போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 7451 ரன்கள் சேர்த்து இருந்தார். இதை சுமார் 409 போட்டிகளில் அவர் எட்டி இருக்கிறார். தோனி 391 டி20 போட்டிகளில் விளையாடி 7,432 ரன்களை சேர்த்து இருக்கிறார். 18 ஆண்டுகளுக்கு பின் டி20 போட்டிகளில் தோனியை முந்தி இருக்கிறார் தினேஷ் கார்த்திக்.

இதில் சுவாரசியமான விஷயம் ஒன்றும் உள்ளது. முதன் முதலில் இந்திய அணி ஆடிய டி20 போட்டியில் தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் ஒன்றாக விளையாடி இருந்தனர். அந்த போட்டியில் தோனி டக் அவுட் ஆகி இருந்தார். ஆனால், தினேஷ் கார்த்திக் 31 ரன்கள் எடுத்திருந்தார்.

அப்போது டி20 போட்டிகளில் தோனியை விட தினேஷ் கார்த்திக் அதிக ரன்கள் சேர்த்து இருந்தார். அதன் பின்பு 2007 டி20 உலகக் கோப்பையிலும் முதல் இரண்டு போட்டிகள் வரை தினேஷ் கார்த்திக் தான் தோனியை விட டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரராக இருந்தார்.

ஆனால், 2007 டி20 உலகக் கோப்பையின் முடிவில் தோனி, தினேஷ் கார்த்திக்கை முந்தினார். அப்போது இருந்து 2024 ஐபிஎல் தொடர் வரை டி20 போட்டிகளில் தோனியே, தினேஷ் கார்த்திக்கை விட அதிக ரன் குவித்த வீரராக இருந்தார். இந்த நிலையில் தற்போது எஸ்ஏ டி20 எனும் லீக் தொடரில் விளையாடி வரும் தினேஷ் கார்த்திக், தோனியை 18 ஆண்டுகளுக்குப் பின் முந்தி இருக்கிறார்.

இரண்டாவது முறையாக தோனியை விட டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரராக மாறி இருக்கிறார் தினேஷ் கார்த்திக். அடுத்து 2025 ஐபிஎல் தொடரில் தோனி விளையாட இருக்கிறார். ஆனால், தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் அப்போது விளையாட மாட்டார்.

எனவே, தினேஷ் கார்த்திக்கின் தற்போதைய சாதனையை மீண்டும் தோனி முறியடிக்க வாய்ப்பு உள்ளது. சுமார் 19 ஆண்டுகளாக தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் இடையே நடந்து வரும் இந்த போட்டி சுவாரசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Story first published: Wednesday, January 29, 2025, 13:22 [IST]
Other articles published on Jan 29, 2025
English summary
SA20 2025: Dinesh Karthik surpass Dhoni's 18 year old T20 most runs record
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+