Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மரண அடி வாங்கிய சிஎஸ்கே தம்பி ஜேஎஸ்கே.. பொளந்து கட்டிய கிளாஸன்.. பிளே ஆஃப் சுற்றில் நடந்த பரிதாபம்

ஜோகன்னஸ்பர்க் : எஸ்ஏ20 லீக் தொடரின் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் போட்டியில் ஜேஎஸ்கே அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி வீழ்த்தியுள்ளது.

ஐபிஎல் தொடருக்கு பின் இந்திய ரசிகர்கள் அதிகமாக பின்பற்றும் லீக் தொடராக எஸ்ஏ20 லீக் தொடர் மாறியுள்ளது. ஐபிஎல் பாணியிலேயே நடத்தப்படும் இந்த லீக்கில், ஐபிஎல் அணிகளே முதலீடு செய்திருப்பது முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை எதிர்த்து ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது.

SA20 : DSG won by 69 runs against JSK and enters into the SA20 League Final

இதில் டாஸ் வென்ற ஜேஎஸ்கே அணி கேப்டன் டூ பிளஸிஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய டிஎஸ்ஜி அணிக்கு ப்ரீட்ஸ்கே - டி காக் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் ப்ரீட்ஸ்கே 12 ரன்களில் ஆட்டமிழக்க, டி காக் 23 ரன்களிலும், ஸ்மட்ஸ் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 10 ஓவர்களில் டிஎஸ்ஜி அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 77 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. இதையடுத்து களமிறங்கிய கிளாஸன் ஆட்டத்தின் போக்கை மொத்தமாக மாற்றினார்.

இம்ரான் தாஹிர் வீசிய 15வது ஓவரில் மட்டும் 4 சிக்ஸ் உட்பட 29 ரன்கள் விளாசப்பட்டது. அதன்பின் பவுண்டரி, சிக்ஸ் என்று விளாசிய கிளாஸன் 22 பந்துகளில் அரைசதம் அடிக்க, தொடர்ந்து 18வது ஓவரிலும் 4 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 29 ரன்கள் சேர்க்கப்பட்டது. சிறப்பாக ஆடிய கிளாஸன் 30 பந்துகளில் 7 சிக்ஸ் உட்பட 74 ரன்களை விளாசினார். இறுதியாக முல்டரும் 23 பந்துகளில் அரைசதம் அடிக்க, டிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது.

இதன்பின் களமிறங்கிய ஜேஎஸ்கே அணிக்கு தொடக்கமே சோகமாக அமைந்தது. 2வது ஓவரிலேயே டு பிளஸிஸ் 3 ரன்களில் ஆட்டமிழக்க, 3வது ஓவரில் நட்சத்திர வீரர் டு ப்ளாய் 10 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து வந்த மக்கன்யா 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க, ஜேஎஸ்கே அணி 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து ஹென்ரிக்ஸ் - மொயின் அலி கூட்டணி அதிரடியாக ரன்கள் சேர்த்தனர். ஆனால் மொயின் அலி 30 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து ஹென்ரிக்ஸ் 27 ரன்களில் வெளியேறினார்.

பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இறுதியாக ஜேஎஸ்கே அணி 17.4 ஓவர்களில் 142 ரன்களில் ஆல் அவுட்டாகியது. இதன் மூலம் எஸ்ஏ20 தொடரில் இருந்து ஜேஎஸ்கே அணி மீண்டும் பிளே ஆஃப் சுற்றுடன் வெளியேறியுள்ளது. இதனால் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை எதிர்த்து டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி விளையாடவுள்ளது.

Story first published: Friday, February 9, 2024, 9:51 [IST]
Other articles published on Feb 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+