Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீயெல்லாம் மனுசனே இல்லை.. வரலாற்று சம்பவம்.. சிஎஸ்கே தம்பி ஜேஎஸ்கேவை பொளந்த கிளாசன்

டர்பன் : தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 எனும் டி20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சக அணியான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் ஆடி வருகிறது. அந்த அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் கிளாசன் ஆடிய ஆட்டம் கிரிக்கெட் ஆர்வலர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.

டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் - ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையேயான டி20 போட்டியில் டர்பன் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்தப் போட்டி நடைபெற்ற மைதானத்தின் பிட்ச் பேட்டிங் செய்யவே முடியாத அளவுக்கு கடினமாக இருந்தது. டர்பன் அணி 34 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது. அடுத்து கிளாசன் பேட்டிங் செய்ய வந்தார்.

SA20 : Heinrich Klaasen hits 41 ball 64 in tough conditions against Joburg Super Kings

அதன் பின் விக்கெட்கள் சரிந்த போதும், கிளாசன் தனி ஆளாக நின்று பேட்டிங் செய்யவே முடியாத பிட்ச்சில் அதிரடி ஆட்டம் ஆடினார். 41 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். இதில் 7 ஃபோர், 2 சிக்ஸ் அடங்கும். 156 ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் ஆடிய ஆட்டம் போட்டியை மாற்றியது. டர்பன் அணி 34 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற நிலையில் இருந்து மீண்டு 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் குவித்தது.

அடுத்து ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியில் இரண்டு வீரர்கள் மட்டுமே 10 ரன்களை தாண்டி ரன் சேர்த்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். அந்த அணியின் ரீஸா ஹென்ரிக்ஸ் 38 ரன்களும், மொயீன் அலி 36 ரன்களும் எடுத்த நிலையில் மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். 20 ஓவர்களில் ஜோபர்க் அணி 9 விக்கெட்களை இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. 37 ரன்கள் வித்தியாசத்தில் டர்பன் அணி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் இரண்டு அணிகளிலும் சேர்த்து 3 பேட்ஸ்மேன்கள் மட்டுமே 20 ரன்களை தாண்டி ரன் குவித்தனர். அதில் கிளாசன் 41 பந்துகளில் 64 ரன்கள் குவித்தது மிகச் சிறந்த டி20 பேட்டிங் இன்னிங்க்ஸில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, January 16, 2024, 9:10 [IST]
Other articles published on Jan 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+