Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SA20 லீக் வரலாற்றிலேயே எந்த வீரரும் தொடாத உச்சம்.. வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷாய் ஹோப் புதிய சாதனை

டர்பன்: தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 டி20 கிரிக்கெட் தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் ஷாய் ஹோப் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இந்தத் தொடரின் வரலாற்றிலேயே ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற புதிய மைல்கல்லை அவர் எட்டியுள்ளார்.
புதன்கிழமை (ஜனவரி 7, 2026) அன்று டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் பிரிட்டோரியா கேபிடல்ஸ் மற்றும் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி நடைபெற்றது. இதில் பிரிட்டோரியா அணிக்காகக் களமிறங்கிய ஷாய் ஹோப், டர்பன் பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்தார்.

SA20 Shai Hope Smashes Highest Individual Score in SA20 History with Brilliant 118

தனது டி20 வாழ்க்கையில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாய் ஹோப், வெறும் 69 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 118 ரன்களை விளாசினார். இதில் 9 பவுண்டரிகளும், 9 இமாலய சிக்ஸர்களும் அடங்கும். இவரது இந்த அதிரடி ஆட்டம் பிரிட்டோரியா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்ட உதவியது.

இதற்கு முன்பு, 2024-ம் ஆண்டு எம்ஐ கேப் டவுன் அணிக்கு எதிராகப் பிரிட்டோரியா வீரர் கைல் வெர்ரைன் எடுத்த 116 ரன்களே எஸ்ஏ20 லீக்கின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக இருந்தது. தற்போது அந்தச் சாதனையை ஷாய் ஹோப் முறியடித்து முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

எஸ்ஏ20 லீக்: அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் பட்டியல்

ஷாய் ஹோப்: 118* (எதிர்: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்)
கைல் வெர்ரைன்: 116* (எதிர்: எம்ஐ கேப் டவுன்)
ஃபாப் டூ பிளசிஸ்: 113* (எதிர்: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்)
ரியான் ரிக்கல்டன்: 113 (எதிர்: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்)
ஜோர்டான் ஹெர்மன்: 106* (எதிர்: எம்ஐ கேப் டவுன்)

முதலில் பேட்டிங் செய்த பிரிட்டோரியா அணி 201 ரன்கள் எடுத்தது. கடினமான இலக்கை நோக்கி விளையாடிய டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் ஜோஸ் பட்லர் அதிரடியாக 97* ரன்கள் எடுத்தார். எனினும், ஆட்டத்தின் 18-வது ஓவரில் பிரிட்டோரியா பந்துவீச்சாளர் லுங்கி நெகிடி, டேவிட் வைஸ், சுனில் நரைன், ஜெரால்ட் கோட்ஸி ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி SA20 வரலாற்றின் முதல் ஹாட்ரிக் சாதனையைப் படைத்தார்.

இறுதியில், டர்பன் அணி 19.4 ஓவர்களில் 186 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் பிரிட்டோரியா கேபிடல்ஸ் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Story first published: Thursday, January 8, 2026, 9:41 [IST]
Other articles published on Jan 8, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+