Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தினேஷ் கார்த்திக்-ஆல் இந்திய அணிக்கு பிரச்சினை.. முன்னாள் வீரர் எச்சரிக்கை.. ஆசிய கோப்பையில் குழப்பம்

மும்பை: தினேஷ் கார்த்திக்- ஆல் இந்திய அணிக்கு பிரச்சினை தான் உண்டாகும் என முன்னாள் வீரர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய அணி தற்போது ஆசிய கோப்பை தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகிறது.

வரும் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் தொடங்கும் இந்த தொடர் செப்டம்பர் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்திய அணி

இந்திய அணி

இந்த தொடருக்கான இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் ஓப்பனிங் வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக் என பெரும் படை உள்ளன. இவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து எப்படி ப்ளேயிங் 11 உருவாக்கப்போகிறார்கள் என்பது தான் தற்போது பெரிய பிரச்சினையாக உள்ளது.

சாபா கரீம் ஐடியா

சாபா கரீம் ஐடியா

இந்நிலையில் இதற்கு முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வுக்குழு அதிகாரியுமான சாபா கரீம் அட்வைஸ் கூறியுள்ளார். அதில், இந்திய அணியின் டாப் ஆர்டர் தற்போது நல்ல பலமாக உள்ளது. ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார், பண்ட், தினேஷ் கார்த்திக் என 7 வீரர்கள் உள்ளனர். ஆனால் இந்த 7 பேருக்குமே இடம் கொடுத்தால் வெறும் 4 பவுலர்கள்தான் இந்தியாவுக்கு மீதம் இருப்பார்கள்.

 காரணம் என்ன

காரணம் என்ன

அணியின் 5வது பவுலராக ஹர்திக் பாண்ட்யா 4 ஓவர்களையும் வீசலாம். ஆனால் 5 பவுலர்களை வைத்துக்கொண்டு டி20ல் ஆடுவது நல்லதல்ல. ரோகித் சர்மாவும் அதனை விரும்பமாட்டார் என நினைக்கிறேன். எனவே பாண்ட்யாவை 6வது பவுலராக வைத்துவிட்டு, பவுலிங்கிற்கு என்று மற்றொரு வீரர் சேர்க்கபடவேண்டும். அப்படி சேர்த்தால் 7 பேட்ஸ்மேன்களில் இருந்து ஒருவரை நீக்க வேண்டும்.

நீடிக்கும் குழப்பம்

நீடிக்கும் குழப்பம்

டாப் ஆர்டர் சரியாக பொருந்தியுள்ளதால் மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக் ஆகியோரில் ஒருவரை தான் நீக்க வேண்டும். இருவரும் ஒரே மாதிரியான வீரர்கள் என்பதால் யாரை நீக்குவது என்ற குழப்பம் உருவாகும். எனவே இதில் ரோகித் என்ன செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Story first published: Monday, August 15, 2022, 12:11 [IST]
Other articles published on Aug 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+