For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவர் இருந்தால் போதும், எதிரணி கண்ணில் விரல் விட்டு ஆட்டிவிடுவார் ரோகித்.. EX - தல சொன்ன கருத்து

மும்பை : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் இரண்டு வாரத்தில் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணி கடைசி கட்ட மாற்றங்களை அணியில் செய்து வருகிறது.

உலகக் கோப்பை போன்ற தொடரில் வெல்ல வேண்டும் என்றால் எதிரணியின் பத்து விக்கெட்டுகளையும் விரைவில் வீழ்த்த வேண்டும். இதற்காக வேகப்பந்துவீச்சாளர்கள்,சுழற் பந்து வீச்சாளர்கள் என பல கலவையில் வீரர்களை இந்திய அணி தேர்வு செய்துள்ளது.

Saba karim feels Rohit sharma understands the importance of Ashwin for ICC World cup

ஆனால் ஆல்ரவுண்டர் வேண்டும் என்பதற்காக இடதுகை சுழல் பந்து வீச்சாளர்கள் இருவரை தேர்வு குழு அணியில் வாய்ப்பு கொடுத்தது. இதனால் இந்திய அணியில் ஒரு வலது கை சுழற் பந்துவீச்சாளர் இல்லாதது பெரிய பின்னடைவாக கருதப்பட்டது. இந்த நிலையில் இடது கை சுழற் பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அக்சர் பட்டேல் காயம் காரணமாக 10 நாட்கள் ஓய்வில் இருக்கிறார். இதனால் அஸ்வினை இந்த இடத்தில் கொண்டு வரலாமா என்ற யோசனையில் ரோகித் சர்மாவும் பயிற்சியாளர் டிராவிட்டும் களம் இறங்கி இருக்கிறார்கள்.

அந்த வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிக் கொண்ட தொடரில் அஸ்வின் களமிறங்குகிறார். இந்த நிலையில் அஸ்வினை ஏன் இந்திய அணி தேர்வு செய்திருக்கிறது என்பது குறித்து முன்னாள் தேர்வு குழு தலைவர் சபாக்கரீம் கருத்துக்களை கூறியுள்ளார்.அதில் அஸ்வினை ஒரு மேட்ச் வின்னராக ரோகித் சர்மா பார்ப்பதாக சபாக்கரிம் கூறியுள்ளார்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் எந்த மாதிரி அணுகுமுறையை கையாள வேண்டும் என்பது குறித்து ரோகித் சர்மாவுக்கு நன்றாகவே தெரியும். தற்போது உலகக்கோப்பை வேறு அருகில் வந்து விட்டது. இதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் உள்ள தற்போது சூழலை நன்றாக புரிந்து கொண்டுள்ள ரோகித் சர்மா அணியிலும் அதே போல் அட்டாக்கிங் மனநிலையுடன் விளையாடும் வீரர்கள் தேவை என்பதை புரிந்து கொண்டுள்ளார்.

தற்போது இருக்கும் பந்துவீச்சு வரிசையில் குறைந்தபட்சம் ஆறில் ஐந்து வீரர்கள் எடுக்கும் நபர்களாக இருக்க வேண்டும் என்று ரோகித் சர்மாவுக்கு நன்றாக தெரியும்.இதனால் அஸ்வின் தற்போது பிளேயிங் லெவனுக்குள் வந்து விட்டால் ரோகித் சர்மாவுக்கு எதிர்பார்த்த அந்த வசதி பந்து வீச்சில் கிடைத்துவிடும். தற்போது அணியில் இடம் கிடைக்காமல் பெஞ்சில் அமர வைக்கப்பட்டுள்ள வீரர்களை நீங்கள் பார்த்தாலே தெரியும்.

அவர்கள் அனைவருமே அதிரடியாக விளையாடக் கூடியவர்கள். எனவே ரோகித் சர்மா இதுபோன்ற ஆக்ரோஷமான அணுகுமுறையை உலக கோப்பையில் கையாள போகிறார் என்று நான் நினைக்கிறேன். இப்படிப்பட்ட அணுகுமுறை தான் ஆசியக் கோப்பையை இந்திய அணி வெல்ல காரணமாக இருந்தது என்று சபாக்கரிம் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, September 20, 2023, 17:33 [IST]
Other articles published on Sep 20, 2023
English summary
Saba karim feels Rohit sharma understands the importance of Ashwin for ICC World cup அவர் இருந்தால் போதும், எதிரணி கண்ணில் விரல் விட்டு ஆட்டிவிடுவார் ரோகித்.. EX - தல சொன்ன கருத்து
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+